Modi About MGR: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த மோடி!’ முழு விவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Modi About Mgr: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த மோடி!’ முழு விவரம் இதோ!

Modi About MGR: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த மோடி!’ முழு விவரம் இதோ!

Published Feb 27, 2024 06:06 PM IST Kathiravan V
Published Feb 27, 2024 06:06 PM IST

  • ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதால் எதிர்க்கட்சிகள் அனைவரும் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர்”

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு நல்லாட்சி கொடுத்தது அம்மா ஜெயலலிதாதான் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார். 

(1 / 13)

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். 

(2 / 13)

(PTI)

தொழில்துறையில் முக்கிய பங்காற்றும் மண்ணாக கொங்கு மண் உள்ளது. ஜவுளி மற்றும் தொழில்துறையில் பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கள் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். 

(3 / 13)

என் மண் என் மக்கள் யாத்திரை ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும், மண்ணுக்கும் உள்ள தொடர்பை காட்டுவதாக உள்ளது. இந்த யாத்திரையை தலைமை தாங்கி நடத்தும் ஆற்றல் மிக்க அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

(4 / 13)

தமிழ்நாட்டில் பாஜக என்றைக்கும் ஆட்சியில் இருந்தது இல்லை; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதயத்தில் பாஜக் உள்ளது. 

(5 / 13)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை தருகிறது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்த மத்திய அரசு கொடுத்த பணத்தை விட மூன்று மடங்கு அதிக பணத்தை மத்திய பாஜக அரசு கொடுத்துள்ளது. 

(6 / 13)

தமிழ்நாட்டுக்கு வந்த போது மரியாதைக்குரிய எம்ஜிஆர் என் நினைவுக்கு வந்தார். நான் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்கு சென்றுள்ளேன். 

(7 / 13)

நல்லாட்சி நடத்தியதன் மூலம் தரமான கல்வி, சுகாதாரத்தை தமிழக மக்களுக்கு தந்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் அவரை மதித்தார்கள். ஏழை மக்கள் அனைவரும் ஒப்பற்ற தலைவராக மக்களை புகழ்ந்து வருகின்றனர். குடும்ப ஆட்சி நடத்த எம்ஜிஆர் ஆட்சிக்கு வரவில்லை, திமுக எம்ஜிஆரை அவதூறு செய்கிறது. 

(8 / 13)

இன்றைக்கு திமுகவால் தமிழ்நாட்டில் எம்ஜிஆரை கேவலப்படுத்தும் ஆட்சி நடந்து வருகிறார். எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுத்தவர் அம்மா ஜெயலலிதாதான் என்பதை என்னால் சொல்ல முடியும். அவருக்கு இந்த மண்ணில் இருந்து மீண்டும் அஞ்சலியை செலுத்துகிறேன்.

(9 / 13)

ஜெயலலிதா அவர்களுடன் பல்லாண்டு காலம் நெருங்கி பணியாற்றி உள்ளேன். எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடித்து அவர் மக்கள் வளர்ச்சிக்கு பணியாற்றியதால்தான் ஜெயலலிதாவை அனைத்து வீடுகளிலும் நினைவுக்கூர்ந்து வருகிறார்கள். 

(10 / 13)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதால் எதிர்க்கட்சிகள் அனைவரும் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.  

(11 / 13)

இந்தி கூட்டணி ஜெயிக்காது என்பது தெரிந்துவிட்டது, ஆனால் தமிழ்நாட்டில் ஜெயிக்கலாம் என இந்தி கூட்டணி நினைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை இதற்கு பூட்டுப்போடுவதாக அமையும்.

(12 / 13)

மீண்டும் பாஜக ஆட்சி அமைய பாஜக தொண்டர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். இளைஞர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மோடியின் உத்தரவாதம் இருந்து உள்ளது. 

(13 / 13)

மற்ற கேலரிக்கள்