46 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. அந்நிய மண்ணில் நான் தான் கெத்து! வரலாறு படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  46 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. அந்நிய மண்ணில் நான் தான் கெத்து! வரலாறு படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா

46 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. அந்நிய மண்ணில் நான் தான் கெத்து! வரலாறு படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா

Jan 04, 2025 09:40 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2025 09:40 AM , IST

  • IND vs AUS, Sydney Test: சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா புதியதொரு வரலாறு படைத்துள்ளார்

சிட்னி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை வெளியேற்றி ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட சாதனை படைத்தார். இந்தியாவின் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இரண்டாவது நாள் தொடக்கத்தில் ஆஸி.யின் சூப்பர் ஸ்டார் மார்னஸ் லபுஸ்சேனை வெளியேற்றி, முன்னாள் இந்திய பவுலரான பிஷன் சிங் பேடியின் ஆல் டைம் சாதனையை முறியடித்தார் 

(1 / 6)

கவாஜா மற்றும் லபுஸ்சேன் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை ஜஸ்பிரித் பும்ராவின் விக்கெட் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணிலும், அயல்நாட்டிலும் ஒரு டெஸ்ட் தொடரிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்

(2 / 6)

அந்நிய நாட்டு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை முன்னாள் ஸ்பின் பவுலர் பிஷன் சிங் பேடி வசம் இருந்தது. 1977-78 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது அவர் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  தற்போது ஜஸ்பிரித் பும்ரா சிட்னி டெஸ்டில் லபுஸ்சேன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பிஷன் சிங் பேடியின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்

(3 / 6)

இந்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் பும்ரா, பேடிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் பகவத் சந்திரசேகர் உள்ளார். 1977-78 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர் மொத்தம் 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

(4 / 6)

ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை ஜஸ்பிரித் பும்ரா வசம் உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளார் 

(5 / 6)

கடந்த 2024ஆம் ஆண்டில் 13 அந்நிய மண் டெஸ்ட் தொடர்களில் விளையாடிய பும்ரா 71 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்

(6 / 6)

(AFP)

மற்ற கேலரிக்கள்