JSK: காலேஜ் முடிச்சதும் சினிமாவுக்கு வரணும்னு வந்த ஆள் தான்.. படிப்படியாக கத்துக்கிட்டு சினிமாவுக்குள் வந்தேன்.. ஜேஎஸ்கே
- நான் காலேஜ் முடிச்சதும் சினிமாவுக்கு வரணும்னு வந்த ஆள் தான்.. படிப்படியாக கத்துக்கிட்டு சினிமாவுக்குள் வந்தேன் என புரொடியூசர் ஜே.சதீஷ் குமார் பேசியுள்ளார்.
- நான் காலேஜ் முடிச்சதும் சினிமாவுக்கு வரணும்னு வந்த ஆள் தான்.. படிப்படியாக கத்துக்கிட்டு சினிமாவுக்குள் வந்தேன் என புரொடியூசர் ஜே.சதீஷ் குமார் பேசியுள்ளார்.
(1 / 6)
JSK: சீரியல்களில் ஹீரோவாக நடிச்சிட்டு இருந்தேன் எனவும்; அரசியல் போனேன் எனவும், திரும்பவும் சினிமா வந்திட்டேன் எனவும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஜே.சதீஷ் குமார் பேசியுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் எனப் பல அவதாரங்களில் செயல்படுபவர், ஜே.சதீஷ் குமார். நடுவுல் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பரதேசி உட்பட 30க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி விநியோகித்தவர்,
(2 / 6)
ஜே.சதீஷ் குமார். ராமின் இயக்கத்தில் உருவான தரமணி, வசந்தின் இயக்கத்தில் உருவான அநீதி, மாரி செல்வராஜின் வாழை உட்பட பல படங்களில் நடித்துள்ள ஜே.சதீஷ் குமார், இன்றைக்கு ஃபயர் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
திரைப்பட விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் தான் பெற்ற அனுபவங்கள் பலவற்றை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில், டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்காகப் பகிர்ந்துகொண்டார். அவற்றின் தொகுப்பு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(3 / 6)
ஜே.எஸ்.கே யார்?
ஜே.சதீஷ் குமார் என்னும் பெயரின் சுருக்கம் என சொல்லலாம். என் தாயின் பெயர் ஜே.சாந்த குமாரி, அப்பா ஜோதி துரை. எனவே, ஜே.எஸ்.கேவை வைத்து லோகோ கிரியேட் செய்தேன். என்னுடைய பெயரும் அதற்குள்ளேயே அடக்கம் ஆகிடுச்சு. அப்படி வந்ததுதான் ஜே.எஸ்.கே. திரைப்படத்துறையில் நிறைய படங்கள் தொடர்ந்து தயாரிச்சு இருக்கேன். தேசிய விருதும் வாங்கியிருக்கேன்.
(4 / 6)
எந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் வரணும்னு தோணுச்சு?
நான் காலேஜ் முடிச்சதும் சினிமாவுக்கு வரணும்னு வந்த ஆள் தான். நடிக்கணும்னு வந்த ஆள் தான். 1993-ல் நிறைய சீரியல்ஸ் வந்து நடிச்சிட்டு இருந்தேன். அப்போது எல்லாம் சன், ஜே.ஜே. டிவியில் நான்கைந்து சீரியல்களில் ஹீரோவாக நடிச்சேன்.
அதன்பின் பெரிய திரைப்படங்கள் பண்ணனும்னு முயன்று 1994ல் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் அது நின்னுப் போச்சு. அடுத்து பயணம் மாறி அரசியல் பயணமாகப்போச்சு. சினிமா மேல் இருந்த தாக்கம், 2007ல் ஒவ்வொரு துறையினையும் படிப்படியாக கத்துக்கிட்டு மீண்டும் சினிமாவுக்குள் வந்தேன்.
(5 / 6)
சினிமாவில் நடிக்க எந்த இயக்குநரையாவது வாய்ப்புத்தேடி சந்தித்தது உண்டா?
இல்லை. அந்த மாதிரி இல்லை. எனக்கு சோழா கிரியேஷனோட முதல் சீரியல் கமிட் ஆச்சு. அதை செல்வா சார் உடைய அசோசியேட் சி.டி. பாண்டி சார் இயக்குனாங்க. அடுத்து கொஞ்ச நாள் கழிச்சி பிரேக் ஆகி சினிமாவுக்கு வரும்போது, நானே தயாரிக்கணும்னு ஆரம்பிச்சு, ஒரே நாளில் இரண்டு படங்கள் பூஜை போட்டேன். அதே நாளிலேயே பாடலும் ரெக்கார்டிங் ஆச்சு. சூட்டும் அடுத்தடுத்து போனோம். அப்போது அப்பாவின் உடல்நிலை காரணமாக, படம் அப்படியே டிராப் ஆச்சு.
அதோட, அந்த பிரீயட்டில் சினிமாவுக்குத் தடை விழுந்திருச்சு. அடுத்து 2007ல் சின்ன ஏரியாக்களில் சினிமா டிஸ்டிரிபியூசன், வியாபாரம் என்றால் என்ன, ஒரு படத்தை விற்கிறது தொடர்பான அந்த துறையை நான் அப்படியே கத்துக்கிற ஆரம்பிச்சேன். அடுத்து தியேட்டர் எடுத்து ரிலீஸ் ஆரம்பிச்சு, அடுத்து தமிழ்நாடு ஏரியா வாங்க ஆரம்பிச்சு, அதன்பின் முழுக்காப்பீட்டு உரிமையும் வாங்கி படங்கள் பண்ண ஆரம்பிச்சேன்.
(6 / 6)
அதனால், ஒரு படம் எடுத்தால் என்னென்ன வழிகளில் வருவாய் வரும் என தெரிஞ்சுக்கணும். முன்பு, திரையரங்க உரிமை இருக்கு, சேட்டிலைட்ஸ் உரிமை, வெளிநாட்டு உரிமை என சிறியளவில் தான் வருவாய் வரும். இப்போது வியாபாரம், யூட்யூப், ஓடிடி, பிறமொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்றது இருக்கு, ஏர் பவுண்டரிஸ், sea பவுண்டரிஸ் இருக்கு. இது எல்லாம் கத்துக்கிட்ட பின் தான், எனக்கு படம் தயாரிக்க நம்பிக்கை வந்தது.
நீங்கள் வாங்கி விநியோகித்த முதல் திரைப்படம் எது?
2007ல் பசுபதி மே/பா. ராசக்காபாளையம் தான் நான் விநியோகம் செய்த முதல் படம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மறைந்த விவேக், மனோ பாலா ஆகியோரால் படம் முழுக்க நகைச்சுவை ததும்பி இருக்கும். ரஞ்சித்தின் கேரியரிலும் முக்கியமான படம்''என முடித்தார், ஜே.சதீஷ் குமார்.
மற்ற கேலரிக்கள்