Anjali Sivaraman: பேட் கேர்ள் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? இந்த பாடகியின் மகளா? தீயாய் பரவும் தகவல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anjali Sivaraman: பேட் கேர்ள் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? இந்த பாடகியின் மகளா? தீயாய் பரவும் தகவல்!

Anjali Sivaraman: பேட் கேர்ள் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? இந்த பாடகியின் மகளா? தீயாய் பரவும் தகவல்!

Jan 31, 2025 12:02 PM IST Suguna Devi P
Jan 31, 2025 12:02 PM , IST

  • Anjali Sivaraman: இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் ஹீரோயின் அஞ்சலி சிவராமன் குறித்தான சுவாரசிய தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது அம்மா இந்தியா சினிமாவில் பிரபல மொழிகளில் பாடியுள்ள பாடகி ஆவார். 

இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். டீன் ஏஜ்ஜில் இருக்கும் கதாநாயகி அவளது கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கையில் இருந்து அவளுக்கு பிடித்த சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறாள். இதையே இப்படத்தின் டிரைலர் கூறியது. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து பலரும் இப்படத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அஞ்சலி சிவராமன் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

(1 / 5)

அஞ்சலி சிவராமன் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். அதன் பின் வெப் தொடர் மற்றும் படத்தில் நடித்துள்ளார். பேட் கேர்ள் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து பலரும் அஞ்சலி குறித்து இணையத்தில் தேடி வருகின்றனர். குறிப்பாக இவர் திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இவரது தோற்றம் உலக அழகி ஐஸ்வர்யா ராயை ஒத்தது போல உள்ளது என பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். 

(2 / 5)

இந்த நிலையில் அஞ்சலில் சிவராமனின் தாயார் பிரபல பாடகி சித்ரா அய்யர் எனத் தெரியவந்துள்ளது. இவர் தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது குரலில் டும் டும் டும் படத்தில் “அத்தான் வருவாக” பாடல், பாண்டவர் பூமி படத்தில் “தோழா தோழா” பாடல், ஸ்டார் படத்தில் "நேந்திக்கிட்டேன் பாடல் என பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. 

(3 / 5)

(Stars Unfold)

அஞ்சலி சிவராமன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கிளாஸ் தொடரில் நடித்து இருந்தார். இவரது நேர்த்தியான நடிப்பாலும், யதார்த்தமான முகபாவனையாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தார். 

(4 / 5)

மேலும் இயக்குனர் சச்சின் குண்டல்கர் இயக்கத்தில் இந்தியில் வெளியான கோபால்ட் புளூ படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த அஞ்சலி தற்போது தமிழில் அறிமுகமாகி உள்ளார். இவரது நடிப்பில் இப்படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பேட் கேர்ள் படத்தின் டிரைலருக்கு பல எதிர்மறை விமர்சனங்களும் வந்து கோண்டிருக்கின்றன. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்