அதிகரித்து வரும் கருத்தரித்தல் மையங்கள்!மாடர்ன் லைப் ஸ்டைல் தான் காரணமா? உண்மையான பின்னணி என்ன?
- பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்தாலும் நமது அடுத்த சந்ததியினரை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கும் விதத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். சமீப காலமாக அதிகரித்து வரும் கருத்தரித்தல் மையங்களே அதற்கு சாட்சி.
- பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்தாலும் நமது அடுத்த சந்ததியினரை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கும் விதத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். சமீப காலமாக அதிகரித்து வரும் கருத்தரித்தல் மையங்களே அதற்கு சாட்சி.
(1 / 7)
மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு முக்கியமான மக்கள்தொகைக் குறிகாட்டியாகும், இது ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆண்டுகளில் சராசரியாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அளவிடுகிறது, மக்கள்தொகை வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும், எதிர்கால மக்கள்தொகை போக்குகளை முன்வைப்பதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க அளவீடு ஆகும்.
(2 / 7)
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2019-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2.0 ஆக உள்ளது, இது 2.1 என்ற சராசரி விகிதத்திற்கும் குறைவாக உள்ளது. கருவுறுதல் விகிதத்தில் இந்த சரிவு இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனை ஆகும், ஏனெனில் இது நிலையான மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை நோக்கி நாட்டின் எதிர்மறையான மாற்றத்தைக் எடுத்துக் காட்டுகிறது.
(3 / 7)
இந்தியாவின் கருவுறுதல் விகிதத்தின் சரிவிற்கு குடும்ப கட்டுபாடு தொடர்பான அரசின் முன்முயற்சிகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மீதான அணுகுமுறைகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
(4 / 7)
இந்தியா போன்ற நாடுகளில் மாறி வரும் வாழ்க்கை முறையும் கருவுறுதல் தடை படுவதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. முன்பு பெண்கள் அதிக்கப்பசமாக 28 அல்லது 30 வயதிற்குள் திருமணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கேரியரில் சாதித்த பின்னர் 35 வயதில் தான் திருமணம் செய்கின்றனர். இயற்கையாகவே பெண்களின் கருவருதல் திறன் இந்த வயதிற்கு பின் குறையத் தொடங்குகிறது.
(5 / 7)
மேலும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் பெயரில் விரும்பியதை உண்ணும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளோம். சீரான உணவுக் கட்டுப்பாடு இல்லாததும் உடல் எடை அதிகரிப்பு, நீர்க்கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதுவும் கருவுறுதலை நேரடியாக பாதிக்கிறது.
(6 / 7)
ஆண்களிலும் விந்து எண்ணிக்கை குறைவது, நீந்தும் திறன் மட்டுப்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட உணவும், உடல் எடையும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க கருவுறுதல் மையங்களுக்கு செல்கின்றனர். இபொழுது ஊருக்கு ஊர் பெரும் வியாபாரமாக இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்