Nandita Swetha: பேய்ப்பட நடிகையாக முத்திரை குத்தப்பட்டாரா நடிகை நந்திதா ஸ்வேதா?! - பின்னணி என்ன?
Nandita Swetha: ஹீரோயின்கள் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சி கதாபாத்திரங்கள் கொண்ட திகில் படங்கள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. ஆனால் நாயகி நந்திதா ஸ்வேதா பெரும்பாலும் தெலுங்கில் திகில் படங்களில் தான் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் குறித்துப் பார்ப்போம்.
(1 / 6)
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் நடித்து முக்கிய நடிகையாகத் திகழ்ந்து வருகிறார், நந்திதா ஸ்வேதா. இவர் தெலுங்கில் நடித்த மொத்த படங்களில் 7 படங்கள் ஹாரர் வகையிலானவை. தமிழில் இவர் வெர்ஷடைல் நடிகையாக இருக்கிறார்.
(2 / 6)
தமிழில் அட்டகத்தி படத்தில் நடித்ததன்மூலம் அறிமுகமானவர், நந்திதா ஸ்வேதா. தெலுங்கில் ‘எக்கிடக்கி போதாவு சின்னவாடா’ என்னும் முதல் படத்திலேயே பேய் வேடத்தில் நடித்தார்.
(3 / 6)
ஏக்கடிக்கி பொத்தாவு சின்னவாடா படத்தின் வெற்றியால் தெலுங்கில் திகில் படங்களில் நந்திதா ஸ்வேதாவுக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.
(4 / 6)
தெலுங்கு மொழியில் அபிநேத்ரி 2, பிரேம கதா சித்ரம் 2, ஐபிசி 376, அக்ஷரா உள்ளிட்ட ஹாரர் த்ரில்லர் படங்களில் நடித்த நந்திதா ஸ்வேதா, தமிழில் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, கலகலப்பு 2, காத்திருப்போர் பட்டியல், தேவி 2, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை, ரத்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
(5 / 6)
ஹாரர் படங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரங்களால் பிரபலமானவர், நந்திதா ஸ்வேதா. இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்