IRCTC Andaman Package: 7 நாள்கள் அந்தமானில் ரொமாண்டிக் விசிட்! ஐஆர்சிடிசியின் சுற்றுலா பிளான் - விலை எவ்வளவு தெரியுமா?
- IRCTC Andaman Tour Package 2024: 300க்கும் மேற்பட்ட தீவுகள், கண்கவர் கடற்கரை என உங்களது நேரத்தை இனிமையாகவும், புதுமையான அனுபவத்தையும் தரும் விதமாக இருக்கும் அந்தமான் தீவுகளுக்கான ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- IRCTC Andaman Tour Package 2024: 300க்கும் மேற்பட்ட தீவுகள், கண்கவர் கடற்கரை என உங்களது நேரத்தை இனிமையாகவும், புதுமையான அனுபவத்தையும் தரும் விதமாக இருக்கும் அந்தமான் தீவுகளுக்கான ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கான பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்திருக்கும் அந்தமான் தீவுகளுக்கான சுற்றுலா பேக்கேஜ்ஜையும் கொண்டுள்ளது. குறிப்பாக புதிதாக திருமண ஆன தம்பதிகள் அங்கு தங்களது பொழுதை ரொமாண்டிக்காக கழிக்கும் விதமாக இந்த பேக்கேஜ் அமைந்துள்ளது (/unsplash.com)
(2 / 6)
இந்தியாவில் எந்த பகுதியிலிருந்து அந்தமானுக்கு செல்ல வேண்டுமானால் முதலில் அதன் தலைநகரான போர்ட் பிளேயருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் ஐஆர்சிடிசி சுற்றுலா பயணம் தொடங்குகிறது. தற்போது பிப்ரவரி 12ஆம் தேதியில் இருந்து இந்த பேக்கேஜ் தொடங்குகிறது(/unsplash.com)
(3 / 6)
6 இரவுகள், 7 பகல்களை கொண்ட டூர் பேக்கேஜ் ஆக இது அமைந்துள்ளது. ஹேவலாக், போர்ட் பிளேயர் என பல்வேறு பகுதிகள் சுற்றி காண்பிக்கப்படுகிறது(/unsplash.com)
(4 / 6)
முதல் நாளில் விமானம் மூலம் போர்ட் பிளேயர் சென்று, பின்னர் இரண்டாவது நாளில் அந்தமான் வடக்கு பகுதியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படும். மூன்றாவது நாளில் போர்ட் பிளேயர் - ஹேவ்லாக் பயணம் இருக்கும். காலபட்டர், ராதா நகர் கடற்கரைக்கு சென்ற பின் ஹேவ்லாக்கில் தங்க வைக்கப்படுவார்கள்(/unsplash.com)
(5 / 6)
நான்காவது நாளில் ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்ட பின் லாக்ஷ்மாபூர் கடற்கரைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஐந்தாவது நாளில் பாரத்பூர் கடற்கரை சென்று இரவில் போர்ட் பிளேயரில் தங்கிய பின் ஆறாவது நாளில் பாரதாங்குக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஏழாவது நாளில் பயணமானது நிறைவு பெறும்(/unsplash.com)
(6 / 6)
இந்த அந்தமான் சுற்றுலா பயணத்துக்கான செலவு ஒருவருக்கு ரூ. 55,500, இருவருக்கு ரூ. 32, 100, மூன்று பேருக்கு ரூ. 29,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்குமிடம், உணவு, பயண இன்சூரன்ஸ் அனைத்தும் பேக்கேஜ்க்கு உள்பட்டதாக உள்ளது. 5 முதல் 11 வயதுடையை குழந்தைகளுக்கு தனி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://www.irctctourism.com என்று இணையதளத்தில் மேலும் தகவல்களை பெறலாம் (/unsplash.com)
மற்ற கேலரிக்கள்