100 வருட வரலாறு.. டீ பிரியர்கள் மத்தியில் பிரபலமாகும் ஹைதராபாத் இரானி சாய்.. சுவாரஸ்ய பின்னணி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  100 வருட வரலாறு.. டீ பிரியர்கள் மத்தியில் பிரபலமாகும் ஹைதராபாத் இரானி சாய்.. சுவாரஸ்ய பின்னணி

100 வருட வரலாறு.. டீ பிரியர்கள் மத்தியில் பிரபலமாகும் ஹைதராபாத் இரானி சாய்.. சுவாரஸ்ய பின்னணி

Jan 04, 2025 12:46 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2025 12:46 PM , IST

  • ஹைதராபாத் என்ற பெயரை கேட்டாலே பிரியாணி தான் நினைவுக்கு வருவதுடன். இதற்கு அடுத்தபடியாக தற்போது அதிகம் பேரால் நினைவு கூறப்படும் விஷயமாக இரானி சாய் இருந்து வருகிறது. மற்ற நகரங்களில் மக்களால் பருகப்படும் டீ வகைகளில் இருந்த முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் இருக்கும் இரானி சாய்க்கு நீண்ட வரலாறு உள்ளது

ஹைதாராபாத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நுமைஷ் என்ற பெயரில் தொழில்துறை கண்காட்சி நடைபெறுவதுண்டு. இங்கு ஹைதராபாத் அடையாளமாக திகழும் இரானி சாய்க்கு என தனியாக ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்

(1 / 6)

ஹைதாராபாத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நுமைஷ் என்ற பெயரில் தொழில்துறை கண்காட்சி நடைபெறுவதுண்டு. இங்கு ஹைதராபாத் அடையாளமாக திகழும் இரானி சாய்க்கு என தனியாக ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்(istockphoto)

ஹைதராபாத்தில் தேநீர் பிரியர்கள் அதிகம். அதைவிட முக்கியமாக, இரானி சாய்க்கான ரசிகர்கள் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், பிற பகுதிகளை சேர்ந்தவர்களும் உள்ளார்கள். இதனால் ஹைதராபாத் இரானி சாய் பிற மெட்ரோ நகரங்களிலும் தற்போது பிரபலமடைந்து வருகிறது

(2 / 6)

ஹைதராபாத்தில் தேநீர் பிரியர்கள் அதிகம். அதைவிட முக்கியமாக, இரானி சாய்க்கான ரசிகர்கள் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், பிற பகுதிகளை சேர்ந்தவர்களும் உள்ளார்கள். இதனால் ஹைதராபாத் இரானி சாய் பிற மெட்ரோ நகரங்களிலும் தற்போது பிரபலமடைந்து வருகிறது(istockphoto)

ஹைதராபாத் லக்டிகாபூலில் உள்ள கஃபே நிலோஃபரில் ஒரு கப் இரானி சாயின் விலை ரூ.35. பஞ்சாரா ஹில்ஸில் பகுதியில் ஒரு கப் ரூ.100. 1/2 கப் இரானி சாயின் விலை ரூ.120. விலை அதிகமாக இருந்தாலும் பலர் இரானி சாயை விரும்பி அருந்துகின்றனர். இரானி சாயுடன், கஃபே நிலோஃபர் பன் மாஸ்கா மற்றும் மலாய் பன்களையும் சைடு டிஷ்ஷாக தருகிறது. அத்துடன் ஹைதராபாத்தில் எங்கு சென்றாலும் கிடைக்ககூடியதாக இரானி சாய் உள்ளது

(3 / 6)

ஹைதராபாத் லக்டிகாபூலில் உள்ள கஃபே நிலோஃபரில் ஒரு கப் இரானி சாயின் விலை ரூ.35. பஞ்சாரா ஹில்ஸில் பகுதியில் ஒரு கப் ரூ.100. 1/2 கப் இரானி சாயின் விலை ரூ.120. விலை அதிகமாக இருந்தாலும் பலர் இரானி சாயை விரும்பி அருந்துகின்றனர். இரானி சாயுடன், கஃபே நிலோஃபர் பன் மாஸ்கா மற்றும் மலாய் பன்களையும் சைடு டிஷ்ஷாக தருகிறது. அத்துடன் ஹைதராபாத்தில் எங்கு சென்றாலும் கிடைக்ககூடியதாக இரானி சாய் உள்ளது(istockphoto)

இரானி சாய் - ஹைதராபாத் நகரம் இடையேயான நூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இது ஈரானிய குடியேறிகளால் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், இரானி சாய்க்கான கடை முதலில் எங்கு நிறுவப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. ஹைதரபாத்தின் பழமையான ஒட்டல்களில் ஒன்றான கிராண்ட் ஹோட்டலில் 1935இல்  தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானியர்களின் இடம்பெயர்வு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தது. அவர்களில் சிலர் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு சென்றனர். சிலர் கடல் வழியாக மும்பை வந்தனர். இன்னும் சிலர் ஹைதராபாத் வந்தனர்

(4 / 6)

இரானி சாய் - ஹைதராபாத் நகரம் இடையேயான நூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இது ஈரானிய குடியேறிகளால் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், இரானி சாய்க்கான கடை முதலில் எங்கு நிறுவப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. ஹைதரபாத்தின் பழமையான ஒட்டல்களில் ஒன்றான கிராண்ட் ஹோட்டலில் 1935இல்  தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானியர்களின் இடம்பெயர்வு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தது. அவர்களில் சிலர் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு சென்றனர். சிலர் கடல் வழியாக மும்பை வந்தனர். இன்னும் சிலர் ஹைதராபாத் வந்தனர்(istockphoto)

ஹைதராபாத்தில் விற்கப்படும் இரானி டீ, ஈரானியர்கள் வீட்டில் குடிக்கும் டீ ஆக இல்லை. ஈரானிய உரிமையாளர்களால் நடத்தப்படும்  ஓட்டல்களில் இந்த தேநீர் விற்கப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த ஓட்டல்களில் பால் மற்றும் டிகாஷனில் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இவை இரண்டும் மெதுவாக நாள் முழுவதும் வேகவைக்கப்பட்டு தேநீர் தயாரிக்கப்படுகிறது

(5 / 6)

ஹைதராபாத்தில் விற்கப்படும் இரானி டீ, ஈரானியர்கள் வீட்டில் குடிக்கும் டீ ஆக இல்லை. ஈரானிய உரிமையாளர்களால் நடத்தப்படும்  ஓட்டல்களில் இந்த தேநீர் விற்கப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த ஓட்டல்களில் பால் மற்றும் டிகாஷனில் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இவை இரண்டும் மெதுவாக நாள் முழுவதும் வேகவைக்கப்பட்டு தேநீர் தயாரிக்கப்படுகிறது(istockphoto)

டீ குடிப்பது இந்திய மக்களின் அன்றாட பழக்கமாக இருந்து வந்தாலும், ஆங்கிலேயர்கள்தான் டீ குடிப்பதை அறிமுகப்படுத்தினார்கள் என்ற வாதம் உள்ளது. ஈரானியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தவுடனேயே, பாலுடன் கலந்து பானத்தை இந்திய மக்கள் குடிக்க பழகிவிட்டார்கள். இதை உணர்ந்த ஈரானியர்கள் கஃபேக்கள் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. படிப்படியாக, ஈரானிய கஃபேக்கள் மக்களின் அங்கமாகவே மாறியுள்ளது

(6 / 6)

டீ குடிப்பது இந்திய மக்களின் அன்றாட பழக்கமாக இருந்து வந்தாலும், ஆங்கிலேயர்கள்தான் டீ குடிப்பதை அறிமுகப்படுத்தினார்கள் என்ற வாதம் உள்ளது. ஈரானியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தவுடனேயே, பாலுடன் கலந்து பானத்தை இந்திய மக்கள் குடிக்க பழகிவிட்டார்கள். இதை உணர்ந்த ஈரானியர்கள் கஃபேக்கள் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. படிப்படியாக, ஈரானிய கஃபேக்கள் மக்களின் அங்கமாகவே மாறியுள்ளது(istockphoto)

மற்ற கேலரிக்கள்