தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ipl 2024: Pat Cummins, Shubman Gill, Ruturaj Gaikwad, List Of All New Indian Premier League Captains

IPL 2024 Captains: 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள்..! இந்த சீசனில் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் யார்?

Mar 21, 2024 09:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 21, 2024 09:12 PM , IST

தோனி, ரோகித் ஷர்மா, கோலி ஆகியோர் கேப்டனாக இல்லாமல் நடைபெற இருக்கும் முதல் தொடராக ஐபிஎல் 2024 உள்ளது. இந்த சீசனில் ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐபிஎல் 2024 தொடரில் புதிய கேப்டன்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஐபிஎல் 2024 தொடரில் ஆறு அணிகள் புதிய கேப்டன்களை மாற்றியுள்ளது. அதன்படி புதிய கேப்டன்கள் அனைவரும் சேர்ந்து இந்த சீசன் தொடங்குவதற்கு முன் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

(1 / 8)

கேப்டன்களுக்கான போட்டோஷுட் எடுப்பதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி தனது பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், ருதுராஜ்  கெய்க்வாட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 2022 சீசனில் இதேபோல் தோனிக்கு கேப்டன்சியில் இருந்து விலகிய நிலையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், பாதி சீசன் அவர் கேப்டனாக செயல்பட்டார். பின்னர் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலக, மீண்டும் கேப்டன் ஆனார் தோனி. தற்போது தோனி இரண்டாவது முறையாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்

(2 / 8)

கடந்த 2023 சீசனில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக நித்திஷ் ராணா நியமிக்கப்பட்டார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். இதனால் அவர் 2022 சீசனுக்கு பிறகும் ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்

(3 / 8)

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக செயல்பட்டு 4 ஐபிஎல் கோப்பைகளை வென்று, வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார் ரோகித் ஷர்மா. ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை ட்ரேடிங் முறையில் வாங்கிய மும்பை இந்தியன்ஸ், அவர் ஐபிஎல் 2024 சீசனில் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது

(4 / 8)

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா அந்த அணி விளையாடிய முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். இதன் பின்னர் கடந்த சீசனிலும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியிருக்கும் நிலையில், குஜராத் டைட்ன்ஸ் புதிய கேப்டனாக ஓபனிங் பேட்ஸ்மேனும், இளம் வீரருமான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்

(5 / 8)

கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 சீசனில் இருந்து விலகினார் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட். அவர் அணியில் இடம்பெறாத நிலையில், டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டார். தற்போது முழு உடல் தகுதியுடன் பண்ட் அணிக்கு திரும்பியிருக்கும் நிலையில் ஐபிஎல் 2024 தொடருக்கு அவரே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

(6 / 8)

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்ஆப்பரிக்காவின் ஐடன் மார்க்ரம் செயல்பட்டார். ஆனால் இந்த முறை அவர் அணியின் சாதாரண வீரராக தொடர இருக்கிறார். உலகக் கோப்பை 2023 வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஐபிஎல் 20245 தொடரில் பொறுப்பேற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்த சீசனில் கேப்டன்சியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முறையே சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், டூ பிளெசிஸ், ஷிகர் தவான் ஆகியோர் மேற்கூறிய அணிகளுக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்கள் 

(7 / 8)

ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்த சீசனில் கேப்டன்சியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முறையே சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், டூ பிளெசிஸ், ஷிகர் தவான் ஆகியோர் மேற்கூறிய அணிகளுக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்கள்

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்