Interview : வேலை தேடும் இளைஞரா நீங்கள்? நேர்முக தேர்வில் அசத்த வேண்டுமா? இதப்படிங்க முதலில்!
- Interview : வேலை தேடும் இளைஞரா நீங்கள்? நேர்முக தேர்வில் அசத்த வேண்டுமா? இதப்படிங்க முதலில்!
- Interview : வேலை தேடும் இளைஞரா நீங்கள்? நேர்முக தேர்வில் அசத்த வேண்டுமா? இதப்படிங்க முதலில்!
(1 / 7)
நிறுவனம் பற்றிய ஆய்வு - உங்களுக்கு வேலை கிடைத்துள்ள நிறுவனம் குறித்து ஆன்லைனில் ஆய்வு செய்யுங்கள். சமூக வலைதளங்களில் பாருங்கள். பல வழிகளிலும் நிறுவனத்தின் சேவைகள், பொருட்கள், அவர்களின் போட்டியாளர், அவர்களின் சேவையை பயன்படுத்துபவர்கள் யார் என்பதை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரே துறையில் இருந்தால், அந்த துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். எனவே நிறுவனம் குறித்து நன்றாக புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு நேர்முகத் தேர்வில் கேட்க்கப்படும் கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்க உதவும். வேலைக்கு உங்களிடம் உள்ள திறமையை எடுத்துக் கூறுவதாகவும், நீங்கள் வேலைக்கு தகுதியானவரா என்பதையும் அது சுட்டிக்காட்டும். இதுபோல் நீங்கள் ஆராய்ச்சி செய்யும்போது, உங்களுக்கு நிறுவனம் குறித்த புரிதல் மற்றும் நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
(2 / 7)
சாப்ஃட் ஸ்கில் - இன்றைய போட்டியான வேலை சந்தையில், நீங்கள் சாப்ஃட் ஸ்கில்களில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இது உங்களை எவ்வித முயற்சியுமின்றி நேர்முகத்தேர்வில் வெற்றி பெற உதவும். வேலை தருபவர்கள், சில சாப்ஃட் ஸ்கில்கள் இருப்பவர்களை அதிகம் தேர்ந்தெடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு சிறந்த உரையாடல் திறன் இருக்க வேண்டும். அனைவருடனும் சேர்ந்து செயல்படவேண்டும். புதிய யோசனைகளை செயல்படுத்துதல், பிரச்னைகளை தீர்ப்பது, குழுப்பணி, பல வேலைகளை செய்ய வேண்டும், நெகிழ்தன்மை உடையவராக இருக்க வேண்டும். நேர்முக தேர்வில் கலந்துகொள்பவரின் திறனை சோதிக்க சில சாப்ஃட் ஸ்கில் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். எனவே சாப்ஃட் ஸ்கில்களில் ஒருவர் சிறந்து விளங்குவது நேர்முகத்தேர்வில் ஜொலிக்க முக்கியம்.
(3 / 7)
கேள்விகள் குறித்து பயிற்சி - பொதுவாக நேர்முகத் தேர்வுகளுக்கு என்று சில பொதுவான கேள்விகள் இருக்கும். அதை பயிற்சிசெய்துகொள்ளுங்கள். அந்த பொதுவான கேள்விகளுக்கு நீங்கள் தேர்வரை கவரும் வகையிலான பதில்களை தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பதில் அளிக்கும் முன், அதை பயிற்சி செய்வது, நீங்கள் நேர்முகத் தேர்வில் சிறப்பாக பதிலளிக்க உதவுகிறது. எனவே ஸ்மார்ட் மற்றும் விரைவான பதில்களை பொதுவான கேள்விகளுக்கு தயார்செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
(4 / 7)
உங்களின் சுய குறிப்பு ரெஸ்யூமே அல்லது சிவி கவர்வதாக இருக்க வேண்டும் - உங்களின் ரெஸ்யூம் மற்றும் அதனுடன் இணைக்கப்படும் கடிதங்கள், உங்கடிள பணிக்கு தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், அதில் உள்ள விவரங்களை பார்த்துதான் நீங்கள் வேலைக்கு தகுதியானவரா என்பது முடிவு செய்யப்படுகிறது. எனவே, உங்களின் திறமைகளை கோடிட்டு காட்ட மறக்காதீர்கள்.அதே நேரத்தில் அந்த ரெஸ்யூம் விரைவில் படித்து முடித்துவிடக்கூடியதாகவும், அதற்குள்ளே உங்களின் விவரங்களை பதிவு செய்ய முடிந்ததாகவும் இருக்கவேண்டும். உங்களின் கல்வித்தகுதிகள், நீங்கள் வெற்றிகரமாக முடித்த ப்ராஜெக்ட்கள், பணி அனுபவங்கள் என அனைத்தும் கொடுத்துவிட்டு, நீங்கள் அப்ளை செய்யும் பணிக்கு தேவையான விஷயங்களையும் திறன்களையும் குறிப்பிடுங்கள்.
(5 / 7)
உங்கள் பணியை தெரிந்துகொள்ளுங்கள் - நேர்முகத் தேர்வுக்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால், நீங்கள் அப்ளை செய்யும் பணி குறித்த விவரத்தை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பணி குறித்த புரிதல் மிகவும் முக்கியம். எனவே நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப உங்களை தகுதிபடுத்திக்கொள்ள அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பணி மற்றும் நீங்கள் செய்யப்போகும் ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்துங்கள்.
(6 / 7)
மாக் இன்டர்வ்யூ – நேர்முகத் தேர்வு போல் செய்துகாட்டுவது - வீட்டிலேயே நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இன்டர்வ்யூ நடப்பதுபோன்ற மாக் இன்டர்வ்யூக்களை செய்து பாருங்கள். அது நீங்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறீர்கள் என்பதை சுட்டி காட்டுவதாக இருக்கும். இதன்மூலம் உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். இது உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உங்கள் செயல்திறனை அதிகரிப்பதாகவும் அமையும்.
மற்ற கேலரிக்கள்