Taapsee Pannu: ‘செல்ஃபி கொடுக்க மாட்டீங்கங்களா..?;தயவு செஞ்சு அவங்களுக்கு பயிற்சி கொடுங்க’ - டாப்சியை வெளுத்த பிரபலம்
Taapsee Pannu: “ஆமாம் அது நான்தான்.. அவ்வளவு கேமராக்கள் சூழ்ந்து படம் பிடித்துக்கொண்டிருக்கும் போது, ஒருவர் ஏன் செல்ஃபியை புறக்கணிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.” - டாப்சியை வெளுத்த பிரபலம்!
(1 / 6)
தமிழில் ‘வந்தான் வென்றான்’, ‘ஆடுகளம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்சி. ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், பிரபல நடிகர் அக்ஷய் குமார் உடன் இணைந்து, ‘கேல் கேல் மெய்ன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் டாப்சி உட்பட படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
(2 / 6)
இன்ஃப்ளூயன்ஸரால் எழுந்த சர்ச்சை
அந்த நிகழ்ச்சியில் இன்ஃப்ளூயன்ஸர் அனன்யா திவேதியும் கலந்து கொண்டார். மேடையில் டாப்சியுடன் கை குலுக்கிய அவர், தொடர்ந்து அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
(3 / 6)
முதல் செல்ஃபி கொடுப்பதற்கு தயார் ஆவது போல இருந்த டாப்சி, என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.. சின்ன புன்முறுவலுடன் செல்ஃபி கொடுக்க மறுத்து விட்டார்.
(4 / 6)
அவர்கள் பின்னால் படம் தொடர்பான கலைஞர்கள் நின்றுகொண்டிருக்க, தொகுப்பாளர் படம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
(5 / 6)
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அனன்யா, “ஆமாம் அது நான்தான்.. அவ்வளவு கேமராக்கள் சூழ்ந்து படம் பிடித்துக்கொண்டிருக்கும் போது, ஒருவர் ஏன் செல்ஃபியை புறக்கணிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.
மற்ற கேலரிக்கள்