International Plastic Bag Free Day 2024 : ‘புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை வேரோடு சாய்ப்போம்!
- International Plastic Bag Free Day 2024 : ‘புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை வேரோடு சாய்ப்போம்!
- International Plastic Bag Free Day 2024 : ‘புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை வேரோடு சாய்ப்போம்!
(1 / 13)
International Plastic Bag Free Day 2024 : ‘புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை வேரோடு சாய்ப்போம்! என்று இந்த நாளில் உறுதிபூணுவோம்.
(2 / 13)
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா நாள் உலகெங்கும் இன்று (ஜூலை 3ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைப்பதற்காக மக்களை ஊக்குவிப்பதற்காகவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
(3 / 13)
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் இந்தாண்டும் உலகம் முழுவதும், பிளாஸ்டிக் பைகள் இல்லாத உலகம் சாத்தியம்தான் என்றும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகளை உபயோகிக்காமல் நாம் சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்றுகளும் உண்டு என்பதை காட்டும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.
(4 / 13)
2022ம் ஆண்டு உலகிலேயே முற்றிலும் பாலித்தீன் பைகளை ஒழித்த முதல் நாடாக பங்களாதேஷ் உள்ளது. உடனடியாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தன.
(5 / 13)
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் 2024 என்பது, உலகம் முழுவதிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் உலகில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பான மாற்றுகள் குறித்து இந்த நாள் எதிர்பார்க்கிறது.
(6 / 13)
சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தின வரலாறு - பை இல்லா உலகம் என்ற அமைப்பு பிளாஸ்டிக் பை இல்லாத நாளை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பு பிளாஸ்டிக் பை இல்லாத உலகத்தை உருவாக்க பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டது. இதில் உள்ள ரெசிரோ என்ற பூஜ்ஜிய கழிவு ஜரோப்பா என்ற அமைப்பு 2008ம் ஆண்டு முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை ஜூலை 3ம் தேதி கடைபிடித்தது.
(7 / 13)
இதைதொடர் ஐரோப்பா யூனியன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் குறித்து சில வழிகாட்டுதல்களை வழங்கியது. உலகிலேயே பங்களாதேஷ்தான் அலுவல் ரீதியாக முதல் முறையாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகளை ஒழித்த முதல் நாடு. இது 2022ம் ஆண்டு நடந்தது.
(8 / 13)
கருப்பொருள் - இந்த நாளின் கருப்பொருள் எப்போதும் பிளாஸ்டிக் இல்லாத உலகம் என்பதாகும். இந்த ஆண்டுக்கான தனிப்பட்ட கருப்பொருள் எதுவும் இல்லை என்பதால், இன்றும் பிளாஸ்டிக் இல்லாத நாளை திட்டமிடுவோம் அதை நீட்டிப்போம் என்ற முழக்கத்துடன் மாற்றுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
(9 / 13)
இந்த நாளின் முக்கிய குறிக்கோளே, விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். மக்காத இந்த பாலித்தீன் பொருட்களால் இந்த உலகம் எவ்வித சுற்றுச்சூழல் பிரச்னைகளை சந்திக்கப்போகிறது என்பது குறித்தும், பிளாஸ்டிக்கின் அச்சுறுத்தல் குறித்தும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
(10 / 13)
முக்கியத்துவம் - பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. எனவே அதன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும். சுற்றுச்சூழல் மாசுக்கு பிளாஸ்டிக் பைகள்தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. இது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் நில மாசுக்களை ஏற்படுத்துகிறது. சாக்கடையை அடைத்துக்கொள்கிறது.
(11 / 13)
இது நீர்நிலைகளை பாதித்து, இறுதியாக கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. எனவே இந்த நாள் பிளாஸ்டிக்கிள் எதிர்மறை பாதிப்புக்களை எடுத்துக்கூறி, மக்களை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஊக்குவிக்கிறது. ஒரு பாலித்தீன் பை மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நல் முயற்சிகளின் காரணமாக பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.
மற்ற கேலரிக்கள்