International Nurses Day 2024: ‘செவிலியரின் சேவையை போற்றுவோம்’.. சர்வதேச செவிலியர் தினம் இன்று!
- International Nurses Day: சமூகத்தை பாதுகாப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களது சேவைகளை போற்றும் விதத்தில் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12-ல் கொண்டாடப்படுகிறது.
- International Nurses Day: சமூகத்தை பாதுகாப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களது சேவைகளை போற்றும் விதத்தில் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12-ல் கொண்டாடப்படுகிறது.
(1 / 6)
சர்வதேச செவிலியர் தினத்தின் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம்.
(2 / 6)
செவிலியர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவரிடம் மருத்துவ அதிகாரி டோரதி சுதர்லேண்ட் 1953 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார்.
(3 / 6)
1965 ஆம் ஆண்டில் இருந்து இந்த தினத்தை சர்வதேச செவிலியர் கவுன்சில் கொண்டாடுகிறது. ஜனவரி 1974 ஆம் ஆண்டில் இருந்து மே 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக சர்வதேச செவிலியர் தினம் அறிவிக்கப்பட்டது.
(4 / 6)
ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள, ஒரு முழக்கம் அறிவிக்கப்படும். இந்தாண்டு முழக்கம் ‘நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி’
(5 / 6)
இந்த பூமிக்கு நாம் வருவதற்கு காரணமாக இருந்த அன்னைக்கும், நம் உடல் நலத்துக்கு பாதிப்பு வரும்போது பேணி காக்கும் செவிலியருக்கும் என்றும் நன்றியுடன் இருப்போம்.
மற்ற கேலரிக்கள்