February Movies: விடாமுயற்சி டூ தண்டேல்.. அதிக எதிர்பார்ப்பில் பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்கள் சிலவை இங்கே!
February Movies: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் என்னென்ன?
(1 / 5)
விடாமுயற்சி:
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்து வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் திரைப்படம், விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியில் இருந்து பின்வாங்கியது.
அதன் பின்னர் இந்த திரைப்படம் பிப்ரவரி 6 ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பிரேக் டவுன் படக்குழுவுடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாகவே படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதிக்கு ரிலீஸ் ஆவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
(2 / 5)
டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம் டிராகன். இந்தப்படமானது காதலர் தினத்தை ஒட்டி, பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் டிராகன் படக்குழு அதன் ரிலீஸ் தேதியை மாற்றி பிப்ரவரி 21ம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்தது.
(3 / 5)
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியிருக்கும் புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், , வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை தனுஷ் தன்னுடைய வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கிறார். முன்னதாக, பிப்ரவரி 6ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
(4 / 5)
‘தண்டேல்’
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து ‘தண்டல்’ திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். சந்தூ மொண்டேடி இயக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மற்ற கேலரிக்கள்