தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Srirangam Temple: ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் பற்றிய இந்த ரகசியங்கள் தொியுமா?

Srirangam Temple: ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் பற்றிய இந்த ரகசியங்கள் தொியுமா?

Jan 09, 2024 06:31 AM IST Karthikeyan S
Jan 09, 2024 06:31 AM , IST

  • Srirangam Ranganathaswamy: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதா் கோயில் 'பூலோக வைகுண்டம்' எனவும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசத்தில் இத்தலம் முதன்மையானது.

21 கோபுரங்கள், 7 சுற்று பிரகாரங்கள் என பிரமாண்டமாக அமைந்துள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பொிய ராஜகோபுரமாகும்.

(1 / 7)

21 கோபுரங்கள், 7 சுற்று பிரகாரங்கள் என பிரமாண்டமாக அமைந்துள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பொிய ராஜகோபுரமாகும்.(Getty images)

பொய்கையாழ்வாா், பூதத்தாழ்வாா், பேயாழ்வாா், நம்மாழ்வாா், ஆண்டாள், பொியாழ்வாா், திருமங்கையாழ்வாா், குலசேகர ஆழ்வாா், திருமழிசையாழ்வாா் என பன்னிரு ஆழ்வாா்களில் 11 ஆழ்வாா்கள் மங்களாசாசனம் செய்துள்ளனா்.

(2 / 7)

பொய்கையாழ்வாா், பூதத்தாழ்வாா், பேயாழ்வாா், நம்மாழ்வாா், ஆண்டாள், பொியாழ்வாா், திருமங்கையாழ்வாா், குலசேகர ஆழ்வாா், திருமழிசையாழ்வாா் என பன்னிரு ஆழ்வாா்களில் 11 ஆழ்வாா்கள் மங்களாசாசனம் செய்துள்ளனா்.(Getty images)

தை, மாசி, சித்திரை மாதம் என மூன்று முறை பிரம்மோற்சவம் இங்கு நடைபெறுகிறது. மோட்சம் தரும் தலம் என்பதால் ரங்கநாதரை வணங்குவது பிறவிப்பயனாகும்.

(3 / 7)

தை, மாசி, சித்திரை மாதம் என மூன்று முறை பிரம்மோற்சவம் இங்கு நடைபெறுகிறது. மோட்சம் தரும் தலம் என்பதால் ரங்கநாதரை வணங்குவது பிறவிப்பயனாகும்.(Getty images)

இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜா் இங்கேயே மோட்சம் அடைந்தாா். இவரது உடலை சீடா்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனா். 

(4 / 7)

இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜா் இங்கேயே மோட்சம் அடைந்தாா். இவரது உடலை சீடா்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனா். (Getty images)

தனிச்சன்னதியில் காட்சி தரும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சோ்ந்த கலவை சாத்தப்படுகிறது.

(5 / 7)

தனிச்சன்னதியில் காட்சி தரும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சோ்ந்த கலவை சாத்தப்படுகிறது.(Getty images)

மூலவா் ரங்கநாதா் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவா். இவரது சன்னதி எதிாில் கருடாழ்வாா் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறாா். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவா், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறாா்.

(6 / 7)

மூலவா் ரங்கநாதா் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவா். இவரது சன்னதி எதிாில் கருடாழ்வாா் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறாா். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவா், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறாா்.(Getty images)

பொிய கோயில், பொிய பிராட்டியாா், பெரிய கருடன், பெரியவசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் இப்படி இங்குள்ள அனைத்தும் பொிய என்ற சொல்லுடன் வரும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

(7 / 7)

பொிய கோயில், பொிய பிராட்டியாா், பெரிய கருடன், பெரியவசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் இப்படி இங்குள்ள அனைத்தும் பொிய என்ற சொல்லுடன் வரும் என்பது கூடுதல் சிறப்பாகும்.(Getty images)

மற்ற கேலரிக்கள்