Cannes Film Festival: கேனஸ் திரைப்பட விழாவின் வரலாறும், சுவாரஸ்யங்களும்
- உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட விழாவாக இருந்து வரும் கேனஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த விழா பற்றிய அறிந்தும், அறியாத விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
- உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட விழாவாக இருந்து வரும் கேனஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த விழா பற்றிய அறிந்தும், அறியாத விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
(1 / 9)
பிரான்ஸில் உள்ள பிரெஞ்ச் ரிவெரியா என்ற பகுதியில் உள்ள ரிசார்ட் நகரம்தான் கேனஸ். இங்கு அரண்மனை போன்ற ஹோட்டல்கள், மணல் நிறைந்த கடற்கரைகள், உயர்மட்ட பொடிக்குகள் நிறைந்துள்ளன. உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவாக கேனஸ் திரைப்பட விழா உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா மே 16 முதல் மே 27 வரை நடைபெறுகிறது
(REUTERS)(2 / 9)
கேனஸ் திரைப்படவிழா முதன் முதலாக 1939ஆம் ஆண்டில் சர்வதேச திரைப்பட விழாவாக நடைபெற்றது. ஆனால் இரண்டாம் உலக போர் முடிவு வரை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை
(Pinterest)(3 / 9)
1950ஆம் ஆண்டில் இந்த கேனஸ் திரைப்பட விழா பிரபலமடைந்ததுடன், பல்வேறு நட்சத்திரங்களும் தோன்ற தொடங்கினர்
(Pintrerest)(4 / 9)
திரைப்பிரபலங்கள் அளிக்கப்படும் மிகவும் கெளரவமாக கருதப்படும் கோல்டன் பனை கோப்பை 1955இல் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த கோப்பை கிராண்ட் பரிக்ஸ் என அழைக்கப்பட்டது
(Pinterest)(5 / 9)
இந்த விருது 18 கேரட் தங்கத்துடன், பனை இலையில் வடிவமைக்கப்பட்டதாக உள்ளது. இதன் விலையானது 20 ஆயிரம் யுரோக்களாக உள்ளது
(Pinterest)(6 / 9)
உலகம் முழுவதும் 4,500 செய்தியாளர்கள் நேரில் சென்று கவர் செய்யும் இரண்டாவது மிகப் பெரிய நிகழ்வாக கேனஸ் திரைப்பட விழா உள்ளது
(AP)(7 / 9)
சராசரியாக உலகம் முழுவதிலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் என திரைத்துறையை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் கேனஸ் திரைப்பட விழாவுக்கு செல்கிறார்கள். அங்கு பெருமை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பில் பேன்ஸியான பேஷன் ஆடைகளிலும் தோன்றுவார்கள்
(AFP)(8 / 9)
கடந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா ‘கௌரவ நாடாக’ கருதப்பட்டது. பிரான்ஸ் நாட்டுடனா இந்தியாவின் 75 ஆண்டுகால உறவை பிரபலிக்கும் விதமாக இந்தியாவுக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டது
(AFP)மற்ற கேலரிக்கள்