தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  India's 3rd Vande Bharat Is Ready To Boost Travel Experience In Indian Railways

Vande Bharat Train: பயணத்துக்கு தயாரான இந்தியாவின் 3வது வந்தே பாரத் ரயில்!

Aug 13, 2022 02:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 13, 2022 02:57 PM , IST

  • இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் எக்பிரஸ் ரயிலை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப்-இல் வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் சோதனை ஓட்டமானது ஐசிஎஃப் முதல் பாடி வரை நிகழ்த்தப்பட்டது.

புதிய புரோட்டோ டைப் வந்தே பாரத் (ரயில் 18) ரயிலை ஒன்றிய ரயில்வே அமைச்சர் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் இருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது அதன் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது

(1 / 8)

நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலான இதை தொடங்கி வைக்கும் முன்னர் அதனை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த புதிய மாடல் ரயில்களை விட ஆற்றல் திறன் வாய்ந்ததாகவும், முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த பயணிகள் பாதுகாப்பை கொண்டதாகவும் உள்ளது

(2 / 8)

இந்த புதிய மாடல் ரயில் சிறந்த முடுக்கம் மற்றும் குறைப்பு திறன் கொண்டதாக அமைந்துள்ளது. வெறும் 140 விநாடிகளில் 160 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் இந்த, முந்தைய வெர்ஷனை விட 5 விநாடிகள் வேகமானதாக உள்ளது

(3 / 8)

இந்த சோதனை ஓட்டத்தின் முடிவுக்கு பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில், அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும் விதமாக 475 வந்தே பாரத் ரயில்களை தயார் செய்ய ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்

(4 / 8)

தற்போது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ரயில்கள் மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் செல்லும் எனவும், எப்போது இந்த ரயில் தனது பயணத்தை தொடங்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஐசிஎஃப்-இல் தயார் செய்யப்படும் மற்ற வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் நாட்டின் பிற முக்கிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்டு பயணிகளின் பயண நேரத்தை கணிசமாக குறைக்கும்

(5 / 8)

முதல் வந்தே பாரத் ரயிலை கடந்த 2019 பிப்ரவரி 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைத்தார். இந்த ரயில் தனது பயணத்தை தொடங்கிய அடுத்த மாதத்தில் மேட் இன் இந்தியா ரயில்வே பெட்டிகளை ஐசிஎஃப் தயார் செய்து வெளியிட்டது. இந்த ரயில்களில் டீசலை மிச்சப்படுத்தவும், மின்சார பயன்பாட்டை 30% குறைக்கவும் கூடிய சுயமாக இயக்கப்படும் எஞ்சின் இடம்பிடித்திருந்தது சிறப்பான விஷயமாக கருதப்பட்டது

(6 / 8)

விரைவில் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் (ரயில் 18) ரயில் பெட்டிகளை தயார் செய்யும் பணிகளும் விரைவில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டிலேயே இந்த ரயில் பெட்டிகள் தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில், பின்னர் தள்ளிப்போடப்பட்டது

(7 / 8)

பல்வேறு விதமான சிறப்பு அம்சங்களுடன், உலக தரத்தில் வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப்-இல் வைத்து தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இங்கு தயார் செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்