முடிவும் தொடக்கமும் தமிழ்நாட்டில் இருந்து தான்..இந்தியாவின் டாப் 10 நீண்ட தூர ரயில்கள் எவையெல்லாம் தெரியுமா?
- India Longest journey Trains: ரயில் பயணம் அனைவரும் ரசிக்கும் பயணமாக உள்ளது. அது ஒரு மணி நேரமாக இருந்தாலும் சரி, நீண்ட தூர பயணமாக இருந்தாலும் சரி மனதில் நீங்காத நினைவுகளை தரும் விதமாகவே அமைந்திருக்கும். இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லும் முக்கியமான ரயில்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
- India Longest journey Trains: ரயில் பயணம் அனைவரும் ரசிக்கும் பயணமாக உள்ளது. அது ஒரு மணி நேரமாக இருந்தாலும் சரி, நீண்ட தூர பயணமாக இருந்தாலும் சரி மனதில் நீங்காத நினைவுகளை தரும் விதமாகவே அமைந்திருக்கும். இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லும் முக்கியமான ரயில்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
(1 / 11)
இந்தியாவின் நீண்ட தூர ரயில்களில் பல ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பயணிக்கும் ரயில்களாக இருக்கின்றன. அதேபோல் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் ரயிலும் உள்ளன
(2 / 11)
விவேக் எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணத்தில் முதல் இடத்தை பிடித்திருக்கும் ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் உள்ளது. நாட்டின் மொத்த எல்லையில் பாதி தூரம் வரை செல்லும் ரயிலாக உள்ளது. 4,154 கிமீ தொலைவு பயணம் கொண்டதாக இருக்கும் இந்த ரயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் வரை செல்கிறது. இந்த ரயிலின் மொத்த பயண நேரமான 75 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் திப்ருகரில் இருந்தும், மூன்று நாட்களுக்குப் பிறகு கன்னியாகுமரியிலிருந்தும் புறப்படுகிறது
(3 / 11)
அரோனய் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான ரயிலாக அரோனை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் இருக்கிறது. இந்த ரயில் பயணிக்கும் பாதை அழகான இயற்கைக்காட்சிகளால் சூழப்பட்டிருப்பதுடன், வித்தியாசமான பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த எக்ஸ்பிரஸ் கேரளாவின் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து அசாமின் சில்சார் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் 3,932 கிமீ தூரத்தை கடந்து, இறுதி இலக்கை அடைய 74 மணி நேரத்தில் சென்றடைகிறது. கேரளாவில் தொடங்கி, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வழியே இந்த எக்ஸ்பிரஸ் செல்கிறது. வாரம் ஒருமுறை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது
(4 / 11)
ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் மூன்றாவது நீளமான ரயிலாக ஹிம்சாகர் எக்ஸ்பிரல் இருக்கிறது. இந்தியாவின் தெற்கிலிருந்து வடக்கே செல்லும் வழியில் வெவ்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து செல்லும் இந்த ரயில் பாதை பயணிகளி மனதை நீங்காத நினைவில் நிற்பதாக இருக்கும். இந்த ரயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வரை இயக்கப்படுகிறது. இது 3,787 கிமீ தூரத்தை 68 மணி நேரம் 20 நிமிடங்களில் கடக்கிறது. இதுவும் வாராந்திர ரயிலாக உள்ளது
(5 / 11)
திருநெல்வேலி - ஜம்மு எக்ஸ்பிரஸ்: தமிழ்நாட்டிலிருந்து - ஜம்மு காஷ்மீர் வரை இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் போலவே, இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதைகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்த ரயிலாக திருநெல்வேலி - ஜம்மு எக்ஸ்பிரஸ் உள்ளது.திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவுக்கு 71 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் 3,642 கிமீ தூரம் பயணிக்கிறது
(6 / 11)
நியூ டின்சுகியா - பெங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் ஐந்தாவது நீளமான ரயில் பயணமாக இந்த ரயில் உள்ளது. டின்சுகியாவிலிருந்து, பெங்களூரு வரை செல்லும் இந்த ரயில் 3,611 கிமீ பயணிக்கிறது. சுமார் 65 மணி நேரம் வரை இந்த பயணம் உள்ளது. அசாமில் இருந்து மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு வழியே வாரம் செல்லும் இந்த ரயில் வாரம் ஒருமுறை இந்த எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது
(7 / 11)
ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் ஆறாவது நீளமான ரயில் பாதையாகும். திரிபுராவின், அகர்தலாவில் இருந்து கர்நாடகாவின் பெங்களூர் கண்டோன்மென்ட் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பாதையில் பயணிக்கும் இந்த ரயில், 3,599 கிமீ, 65 மணி நேரத்தில் செல்கிறது. இந்த ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு திரிபுரா மற்றும் கர்நாடகா இடையில் பல மாநிலங்களை இணைக்கிறது
(8 / 11)
SF எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் ஏழாவது நீளமான ரயிலாக உள்ளது. இது அசாமில் உள்ள சில்சார் முதல் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் வரை செல்கிறது. இந்த ரயில் 64 மணி நேரம் 15 நிமிடங்கள் பயணித்து 3,544 கிமீ செல்கிறது. இந்த ரயில் பல மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது
(9 / 11)
அவாத் அசாம் எக்ஸ்பிரஸ்: நாட்டின் மிக நீளமான ரயில் பாதைகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் உள்ளது. இது 3,118 கிமீ தூரத்தை 66 மணி நேரம் 25 நிமிடங்களில் பயணிக்கிறது. இந்த ரயில் வாரம் ஒருமுறை அசாமில் உள்ள திப்ருகரில் இருந்து இயக்கப்பட்டு அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து ராஜஸ்தானில் இருக்கும் லால்கார்கை சென்றடைகிறது. இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியை இணைக்கும் நீண்ட தூர ரயிலாக இது அமைந்துள்ளது
(10 / 11)
கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் நீண்ட தூர ரயில்களில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு வரை செல்கிறது. 52 மணிநேரம் 30 நிமிடங்கள் பயணிக்கும் இந்த ரயில் 3,110 கிமீ தூரத்தை கடக்கிறது. வாராந்திர ரயிலாக இது அமைந்துள்ளது
மற்ற கேலரிக்கள்