Indian Hockey Team Record: அடுத்தடுத்து பதக்கங்கள்..! 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதனை
- இந்திய ஹாக்கியின் பொன்னான நாள்கள் மீண்டும் வந்துள்ளன. ஒரு காலத்தில் பல புயல்களை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணியை பிஆர் ஸ்ரீஜேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், மன்பிரீத் சிங் போன்ற ஸ்டார் வீரர்கள் மீட்டுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளது இந்தியா. அந்த பதக்கத்துடன் ஸ்ரீஜேஷ் விடை பெற்றுள்ளார்.
- இந்திய ஹாக்கியின் பொன்னான நாள்கள் மீண்டும் வந்துள்ளன. ஒரு காலத்தில் பல புயல்களை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணியை பிஆர் ஸ்ரீஜேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், மன்பிரீத் சிங் போன்ற ஸ்டார் வீரர்கள் மீட்டுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளது இந்தியா. அந்த பதக்கத்துடன் ஸ்ரீஜேஷ் விடை பெற்றுள்ளார்.
(1 / 5)
41 ஆண்டுகளாக இந்த பதக்கம் என்பது கானல் நீராக இருந்த வர அந்த வறட்சி கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீங்கியது. இதைத்தொடர்ந்து 52 வருடத்துக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது
(2 / 5)
கடந்த 1968ஆம் ஆண்டு நடைபெற்ற மெக்சிகோ சிட்டி ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலம் வென்றது. இதன்பின்னர் 1972இல் நடந்த முனிச் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் வெண்கலத்தை வென்றது. இதைத்தொடர்ந்து 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. 41 ஆண்டுகள் வறட்சிக்கு பின், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மீண்டும் பதக்க வேட்டையை தொடங்கியது. இடைப்பட்ட காலத்தில் இந்தியா ஹாக்கி அணி பல்வேறு ஏற்ற தாழ்வுகளை சந்தித்தது. இந்திய ஹாக்கியின் மறுமலர்ச்சி டோக்கியோவில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது
(3 / 5)
ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி இதுவரை வென்றிருக்கும் தங்க பதக்கங்கள் பின்வருமாறு: 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் தங்கம், 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம், 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் தங்கம், 1948 லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் தங்கம், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் தங்கம், 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் என தங்கத்தை அள்ளிய அணியாக திகழ்ந்தது. இதன் பின்னர் 24 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தங்கம் பதக்கத்தை 1980இல் நடந்த மாஸ்கோ ஒலிம்பிக்கில் வென்றது
(4 / 5)
தங்கம் தவிர ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டில் இந்தியா 1960 ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளி, 1968 மெக்சிகோ சிட்டி ஒலிம்பிக்கில் வெண்கலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் வெண்கலம் வென்றுள்ளது
மற்ற கேலரிக்கள்