வெறுங்காலோடு ஓடி வெற்றியை தனதாக்கிய கால்களுக்கு சொந்தக்காரர்! சர்வதேச மேடையில் சாதனை படைத்த ஹிமா தாஸ்!
- உலக தடகளப் போட்டியில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஹிமா தாஸ் இன்று 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் குறித்தான சில சுவாரசிய தகவல் இதோ.
- உலக தடகளப் போட்டியில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஹிமா தாஸ் இன்று 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் குறித்தான சில சுவாரசிய தகவல் இதோ.
(1 / 5)
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைநிமிரவைத்தவர் ஆவார். சிறு கிராமத்தில் பிறந்து வெற்றுக் கால்களில் ஓடி பழக்கியவர். பின்னாளில் இவரது சாதானைக்காக பிரபல ஷூ நிறுவனமான அடிதாஸ் இவரது பெயர் பொறித்த ஷூவை பரிசாக வழங்கியது. இத்தனை சாதனைகளுக்கும் சொந்த காரர் ஆன இவர் இன்று அவரது 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
(2 / 5)
அசாமின் ஒரு கிராமத்தில் பிறந்த ஹிமா தாசிற்கு கால்பந்தாட்ட வீரர் ஆக வேண்டும் என்பதே முதன்மையான விருப்பமாக இருந்துள்ளது. அவர் இருந்த கிராமத்தில் 100 ரூபாய் காசிற்காக கால்பந்து விளையாடுவாராம். கால்பந்து விளையாட வேகமாக ஓடி பயிற்சி எடுப்பது வழக்கம். அதுவே அவரை விரைவு ஓட்டப்பந்தய வீராங்கனையாக மாற்றியது.
(3 / 5)
காமன்வெல்த் போட்டிகளில் ஆறாவது இடத்தை பிடித்த ஹிமா உலகத் தடகள போட்டியில் தங்கம் வென்றது யாராலும் நம்ப முடியாத செயலாக அமைந்தது. சர்வதேச அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் 400 மீட்டர் தூரத்தை 51.46 விநாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
(4 / 5)
விவாசய குடும்பத்தில் இருந்து வந்த ஹிமா தாஸ் இந்த சர்வதேச சாதனையால் உலகம் அறியும் நபராக மாறினார். உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்றதை தொடர்ந்து ஆசிய போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி என பதக்கங்களை குவித்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்