Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்கு அதிகாலை காட்சி இருக்கா இல்லையா?.. டிக்கெட் விலை அதிகமா?- உண்மை நிலவரம் என்ன? -
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்கு அதிகாலை காட்சி இருக்கா இல்லையா?.. டிக்கெட் விலை அதிகமா?- உண்மை நிலவரம் என்ன? -

Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்கு அதிகாலை காட்சி இருக்கா இல்லையா?.. டிக்கெட் விலை அதிகமா?- உண்மை நிலவரம் என்ன? -

Published Jul 11, 2024 09:20 PM IST Kalyani Pandiyan S
Published Jul 11, 2024 09:20 PM IST

Indian 2: இந்தியன் 2 திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்கலாம். 

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான  ‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில், கமல்ஹாசன் உடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது.  

(1 / 5)

தமிழகத்தில் அதிகாலை காட்சிகள்தமிழ்நாட்டை பொருத்தவரை, நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களின் படங்களுக்கு முதல் நாளன்று காலை 4 மணி காட்சி கொடுப்பதுவழக்கத்தில் இருந்தது. ஆனால், கடந்த வருடம் துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக வெளியான போது, அது தொடர்பான தியேட்டர் கொண்டாட்டத்தில், அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதகாரமாக வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் இனி அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி ஒளிப்பரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கு அரசு அனுமதி அளிக்க வில்லை. அதற்கு மாற்றாக காலை 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதே போல படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.  

(2 / 5)

தமிழகத்தில் அதிகாலை காட்சிகள்

தமிழ்நாட்டை பொருத்தவரை, நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களின் படங்களுக்கு முதல் நாளன்று காலை 4 மணி காட்சி கொடுப்பதுவழக்கத்தில் இருந்தது. ஆனால், கடந்த வருடம் துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக வெளியான போது, அது தொடர்பான தியேட்டர் கொண்டாட்டத்தில், அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதகாரமாக வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் இனி அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி ஒளிப்பரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கு அரசு அனுமதி அளிக்க வில்லை. அதற்கு மாற்றாக காலை 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதே போல படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. 

தெலங்கானாவில் டிக்கெட் விலை என்ன? தெலுங்கில் இந்தப்படம்  ‘பாரதியூடு 2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஆந்திர அரசு அங்கு படம் வெளியான முதல் வாரத்திற்கு மட்டும், தினமும் 5 காட்சிளை திரையிட்டு கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் கூடுதலாக 75 ரூபாயும், சிங்கிள் ஸ்கீரின்களில் கூடுதலாக 50 ரூபாயும் வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.  

(3 / 5)

தெலங்கானாவில் டிக்கெட் விலை என்ன? 

தெலுங்கில் இந்தப்படம்  ‘பாரதியூடு 2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஆந்திர அரசு அங்கு படம் வெளியான முதல் வாரத்திற்கு மட்டும், தினமும் 5 காட்சிளை திரையிட்டு கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் கூடுதலாக 75 ரூபாயும், சிங்கிள் ஸ்கீரின்களில் கூடுதலாக 50 ரூபாயும் வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

ஆந்திராவில் சட்ட மோதல்நாக் அஸ்வினின் இயக்கத்தில் வெளியான கல்கி படத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டி, ராகேஷ் ரெட்டி என்பவர், மாநில அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், 

(4 / 5)

ஆந்திராவில் சட்ட மோதல்

நாக் அஸ்வினின் இயக்கத்தில் வெளியான கல்கி படத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டி, ராகேஷ் ரெட்டி என்பவர், மாநில அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், 

வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. ‘இந்தியன் 2’ படத்தை பொருத்தவரை, அங்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை. 

(5 / 5)

வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. ‘இந்தியன் 2’ படத்தை பொருத்தவரை, அங்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை. 

மற்ற கேலரிக்கள்