India Map Dam: அதிசயம் ஆனால் உண்மை..! பார்ப்பதற்கு இந்திய வரைப்படம் போல் காட்சியளிக்கும் நீர்தேக்கம் - எங்கு தெரியுமா?-independence day2024 this reservoir looks like indian map when saw from aerial view its in karnataka - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  India Map Dam: அதிசயம் ஆனால் உண்மை..! பார்ப்பதற்கு இந்திய வரைப்படம் போல் காட்சியளிக்கும் நீர்தேக்கம் - எங்கு தெரியுமா?

India Map Dam: அதிசயம் ஆனால் உண்மை..! பார்ப்பதற்கு இந்திய வரைப்படம் போல் காட்சியளிக்கும் நீர்தேக்கம் - எங்கு தெரியுமா?

Aug 13, 2024 03:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 13, 2024 03:59 PM , IST

  • இந்த அணையை பார்த்தால் அப்படியே இந்தியாவின் வரைப்படத்தை உரித்து வைத்தாற்போல் இருக்கும். இந்த அணையானது கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ளது. இந்த அணையின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்

இது திட்டமிட்டு அமைக்கப்பவில்லை, இயற்கையாகவே இந்த அணை இப்படி இந்திய வரைபடம் போல் வடிவம் பெற்றுள்ளது. இது கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுக்காவின் இருக்கும் இந்த அணையின் பெயர் வாணி விலாச சாகர் ஆகும். இதை கர்நாடக சுற்றுலாத் துறை பகிர்ந்துள்ளது

(1 / 6)

வாணி விலாச சாகர் நீர்த்தேக்கம் உள்ளது, மாநில நீர்வளத்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக உள்ளது. இது கிருஷ்ணா ஜல்பாக்யா யோஜனாவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது

(2 / 6)

வாணி விலாச சாகர் நீர்த்தேக்கத் திட்டம் 1898 முதல் 1907 வரை வி.வி.பூர் கிராமத்துக்கு அருகில் வேதவதி ஆற்றின் குறுக்கே மைசூர் சமஸ்தான மன்னர் நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் தாயார் கெம்ப நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானத்தின் பெயரில் கட்டப்பட்டது

(3 / 6)

சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹிரியூர் தாலுக்கா முற்றிலும் தரிசு நிலமாக உள்ளது. நீர் பாசனம் பெறுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சித்ரதுர்கா மற்றும் தும்கூரின் சில பகுதிகளுக்கு இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

(4 / 6)

1907இல் வி.வி.சாகர் நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பிறகு, 1933ஆம் ஆண்டு முதல் முறையாக அதிகபட்சமாக 130 அடியை எட்டியதால் 30 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்பட்டது. சமீபத்தில், 2000ஆம் ஆண்டில் 22.00 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்பட்டது. மற்ற இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் (2019-20க்கு முன்) மழை இல்லாததால் நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்தது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால் தண்ணீர் அளவும் இங்கு அதிகரித்துள்ளது

(5 / 6)

இந்த சிறிய நீர்த்தேக்கம் அவ்வப்போது நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.  இது சித்ரதுர்கா பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது. இதன் தோற்றம் இந்திய வரைபடத்தை ஒத்திருக்கிறது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்