Indian National Flag Hoist Rules: சுதந்திர தினம்..! வீட்டில் தேசிய கொடி ஏற்றும் முன் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க-independence day 2024 know these rules before hoist the national flag at home - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Indian National Flag Hoist Rules: சுதந்திர தினம்..! வீட்டில் தேசிய கொடி ஏற்றும் முன் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க

Indian National Flag Hoist Rules: சுதந்திர தினம்..! வீட்டில் தேசிய கொடி ஏற்றும் முன் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க

Aug 14, 2024 02:31 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 14, 2024 02:31 PM , IST

  • Indian National Flag: நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டிலேலே தேசிய கொடியை ஏற்றி அதன் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பழக்கம் மக்களிடையே ஏற்படுட்டுள்ளது. ஆனால் மூவர்ண கொடியை ஏற்றும் முன் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் இருக்கின்றன

(1 / 6)

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டிலேலே தேசிய கொடியை ஏற்றி அதன் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பழக்கம் மக்களிடையே ஏற்படுட்டுள்ளது. ஆனால் மூவர்ண கொடியை ஏற்றும் முன் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் இருக்கின்றன

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றப்படுகிறது. இந்த இரண்டு நாள்களிலும் நாட்டின் தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த நாள்களில் தேசிய கொடியை ஏற்றும் முறையிலும் சில வேறுபாடுகள் உள்ளன

(2 / 6)

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றப்படுகிறது. இந்த இரண்டு நாள்களிலும் நாட்டின் தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த நாள்களில் தேசிய கொடியை ஏற்றும் முறையிலும் சில வேறுபாடுகள் உள்ளன

குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கொடி பறக்கவிடப்படுகிறது. அதாவது தேசிய கொடி மேல்புறத்தில் மடித்து வைக்கப்படுகிறது. பின்னர் அது திறக்கப்பட்டு பறக்கவிடப்படுகிறது. புரியும்படியாக அவிழ்த்துவிடப்படுகிறது

(3 / 6)

குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கொடி பறக்கவிடப்படுகிறது. அதாவது தேசிய கொடி மேல்புறத்தில் மடித்து வைக்கப்படுகிறது. பின்னர் அது திறக்கப்பட்டு பறக்கவிடப்படுகிறது. புரியும்படியாக அவிழ்த்துவிடப்படுகிறது(PTI)

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய கொடியானது மடித்து வைக்கப்பட்ட நிலையில் கீழிருந்து மேல் வரை ஏற்றப்படுகிறது இதன் பின்னர் அவிழ்த்துவிடப்படுகிறதுய இதன் காரணமாகவே கொடி ஏற்றப்படுகிறது என அழைக்கப்படுகிறது

(4 / 6)

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய கொடியானது மடித்து வைக்கப்பட்ட நிலையில் கீழிருந்து மேல் வரை ஏற்றப்படுகிறது இதன் பின்னர் அவிழ்த்துவிடப்படுகிறதுய இதன் காரணமாகவே கொடி ஏற்றப்படுகிறது என அழைக்கப்படுகிறது(PTI)

இந்தியா ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. எனவே இந்த நாளில், அதாவது 15 ஆகஸ்ட் 1947 அன்று, பிரிட்டிஷ் யூனியன் கொடி இறக்கப்பட்டு, இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அன்று முதல் இந்த கொடி ஏற்றும் நடைமுறை இருந்து வருகிறது

(5 / 6)

இந்தியா ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. எனவே இந்த நாளில், அதாவது 15 ஆகஸ்ட் 1947 அன்று, பிரிட்டிஷ் யூனியன் கொடி இறக்கப்பட்டு, இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அன்று முதல் இந்த கொடி ஏற்றும் நடைமுறை இருந்து வருகிறது(AFP)

ஜனவரி 26, 1950, நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதால், இந்தியாவின் தேசியக் கொடி மேலே ஏற்றப்பட்டு பறந்நவாறு உள்ளது. எனவே கொடி மீண்டும் ஏற்றப்படாமல் மடிந்த நிலையில், அது ஜனவரி 26 அன்று அவிழ்க்கப்படுகிறது

(6 / 6)

ஜனவரி 26, 1950, நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதால், இந்தியாவின் தேசியக் கொடி மேலே ஏற்றப்பட்டு பறந்நவாறு உள்ளது. எனவே கொடி மீண்டும் ஏற்றப்படாமல் மடிந்த நிலையில், அது ஜனவரி 26 அன்று அவிழ்க்கப்படுகிறது(AP)

மற்ற கேலரிக்கள்