IND vs SA, Barbados Weather Forecast: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மழை வருமா? போட்டி ரத்தானால் எந்த அணி சாம்பியன்
- India vs South Africa Barbados Weather Update: மேற்கிந்தியத் தீவுகளில் மழைக்காலம் என்பதால் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் பார்படாஸ் நகரில் மழை வருமா? போட்டி ரத்தானால் எந்த அணி சாம்பியன் என்பது குறித்துப் பார்ப்போம்.
- India vs South Africa Barbados Weather Update: மேற்கிந்தியத் தீவுகளில் மழைக்காலம் என்பதால் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் பார்படாஸ் நகரில் மழை வருமா? போட்டி ரத்தானால் எந்த அணி சாம்பியன் என்பது குறித்துப் பார்ப்போம்.
(1 / 6)
கயானாவில் ஜூன் 27ல் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 இரண்டாவது அரையிறுதியின் போது, தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக போட்டி திட்டமிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாக தொடங்கியது. இரண்டாவது அரையிறுதியில் மீண்டும் ரிசர்வ் நாள் இல்லை. இருப்பினும், இறுதியில் முழு 20 ஓவர் ஆட்டம் விளையாடப்பட்டது. இறுதிப் போட்டி ஜூன் 29 (சனிக்கிழமை) பார்படாஸில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா?. வாருங்கள் பார்ப்போம்.
(2 / 6)
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. டிரினிடாட்டில் நடந்த முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. அதேபோல், 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
(3 / 6)
இருப்பினும், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு முன்பு, அனைத்து கண்களும் பார்படாஸில் வானிலை மீது இருக்கும். மேற்கிந்தியத் தீவுகளில் இது மழைக்காலம் என்பதால் தான் இந்த பதற்றம். எனவே எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இருந்தாலும், பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வானிலை எப்படி இருக்கும்?
(4 / 6)
தற்போதைய நிலவரப்படி, இரண்டு நாட்களும் வானிலை மிகவும் மோசமாக இருக்கும். accuweather.com படி, சனிக்கிழமை (ஜூன் 29) லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மழை பெய்ய 47% வாய்ப்பு உள்ளது. வானம் 99% மேகமூட்டத்துடன் காணப்படும்.
(5 / 6)
மற்ற கேலரிக்கள்






