IND vs AUS 4th Test Day 1 Live: காட்டு காட்டும் 19 வயது கான்ஸ்டாஸ்.. ஆஸி., துவக்கமே அட்டகாசம்!
- பார்டர் - கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- பார்டர் - கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
(1 / 5)
ஆரம்பத்தில் சாம் கான்ஸ்டாஸ் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற டி20 கிரிக்கெட்டை விளையாடு வருகிறார். இன்னிங்ஸின் 7-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் கான்ஸ்டாஸ் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது. கான்ஸ்டாஸ் 20 ரன்களுடனும், கவாஜா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். (AFP)
(2 / 5)
சாம் கான்ஸ்டாஸுடன் உஸ்மான் கவாஜா இன்னிங்ஸைத் தொடங்கினார். இந்தியாவைப் பொறுத்தவரை, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் புதிய பந்தில் ஆடுகளத்தின் இரு முனைகளிலிருந்தும் பந்துவீச்சை தொடங்கினர். ஆரம்பத்தில் பும்ரா வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட கான்ஸ்டாஸ் முயன்றார். ஆனால், அவர் தோல்வியடைந்தார். 5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. கான்ஸ்டாஸ் 18 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார். கவாஜா 12 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். பும்ரா 3 ஓவர்களில் 2 மெய்டன்கள் உட்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். (AFP)
(3 / 5)
ஆஸ்திரேலியா வீரர்கள்: உஸ்மான் கவாஜா, சாம் கோன்டஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட். (AP)
(4 / 5)
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்(AP)
(5 / 5)
மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா டாஸ் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். எனவே, இந்திய அணி எம்சிஜியில் ரன் வேட்டையாடும். பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்டுக்கான இந்திய ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஷுப்மன் கில்லை இறக்கிவிட்டனர். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி களமிறக்கியது.(AFP)
மற்ற கேலரிக்கள்