Vida V1 Electric scooter: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! என்னெல்லாம் ஸ்பெஷல் பாருங்க
- பேட்டரியை தனியாக நீக்கும் வசதியுடன் விடா வி1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. இதனால் எளிதாக அதை வெளியே எடுத்து வீட்டில் வைத்தோ அல்லது வேறும் எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்
- பேட்டரியை தனியாக நீக்கும் வசதியுடன் விடா வி1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. இதனால் எளிதாக அதை வெளியே எடுத்து வீட்டில் வைத்தோ அல்லது வேறும் எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்
(1 / 9)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா என்கிற துணை பிராண்ட் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது விடா வி1 புரோ, விடா வி1 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது
(2 / 9)
விடா வி1 புரோ அதிகம் கவனத்தை ஈரக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. பேட்டரிகளை எளிதாக நீக்கும் வசதி இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் வைத்தோ அல்லது வேறு இடங்களில் வைத்தோ எளிதாக சார்ஜிங் செய்து கொள்ளலாம்
(3 / 9)
ஸ்கூட்டரில் இருந்து தனியாக எடுக்கும் வசதி கொண்ட பேட்டரி கையாள மிகவும் எளிதாக இருப்பது தனி சிறப்பு. நீங்கள் அப்பார்ட்மெண்டில் வசிப்பவராக இருந்தால் உங்களது பார்க்கிங்கில் சார்ஜிங் சாக்கெட் இணைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏதர் க்ரிட்டிலும், இந்த விடா பேட்டரிகளை சார்ஜிங் செய்து கொள்ளலாம்
(4 / 9)
விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிஎம்எஸ்எம் எலெக்ட்ரிக் மோட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டர் 3.9 kW இன் தொடர்ச்சியான மின் உற்பத்தி மற்றும் 6 kWh இன் உச்ச மின் உற்பத்தியை உருவாக்கும். முறுக்குவிசை வெளியீடு 25 Nm ஆக உள்ளது. த்ரோட்டில் மிகவும் நன்றாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. திடீர் ஜர்க் எதுவும் இல்லாமல், வாகனத்தை இயக்கும்போதுசிறிதளவு உள்ளீடுகளைக் கொடுத்தாலும், மின்சார மோட்டார் த்ரோட்டில் உள்ளீட்டைப் பதிவு செய்ய முடியும்
(5 / 9)
ஸ்கூட்டரில் இருக்கும் TFT திரையானது தொடுதிரையாக இடம்பெறவில்லை. இடது சுவிட்ச் கியரில் உள்ள பொத்தான்கள் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சென்சார் இருப்பதால் அது பகல் மற்றும் இரவு பயண முறைக்கு ஏற்ப தானாகவே மாறும். இந்த திரை புளூடூத் இணைப்பை கொண்டிருக்கிறது
(6 / 9)
பூட் இடம் வியக்கத்தக்க வகையில் ஆழமானதாக உள்ளது. இதில் முழு ஹெல்மெட்டைப் வைக்க முடியும். முன்புறத்தில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது, அதில் சார்ஜரை சேமிக்க பயன்படுத்தலாம்
(7 / 9)
எல்இடி ஹெட்லேம்ப் தனித்துவமான பகல்நேர ரன்னிங் லேம்பைக் கொண்டுள்ளது, அதன் வடிவமைப்பு டெயில் விளக்கிலும் இடம்பிடி்ததுள்ளது. ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் அமைப்பு சாலையில் ஒரு நல்ல பரவலை வழங்குகிறது
(8 / 9)
Vida V1 Pro ஆனது கீலெஸ் என்ட்ரி உடன் வருகிறது. கீ ஃபோப் உங்கள் பாக்கெட்டில் இருக்கும். ரைடர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் ஸ்கூட்டர் வரை சென்று பட்டனை அழுத்தினால் ஸ்கூட்டர் ஆன் ஆகும். இருப்பினும், கீ ஃபோப்பின் தரம் அவ்வளவு பெரிதாக இல்லை
மற்ற கேலரிக்கள்