Hyundai Inster: இரண்டு பேட்டரிகள்..! வெவ்வேறு மைலேஜ் மற்றும் வேகம் - ஹூண்டாயின் முரட்டுத்தனமான இவி கார்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hyundai Inster: இரண்டு பேட்டரிகள்..! வெவ்வேறு மைலேஜ் மற்றும் வேகம் - ஹூண்டாயின் முரட்டுத்தனமான இவி கார்

Hyundai Inster: இரண்டு பேட்டரிகள்..! வெவ்வேறு மைலேஜ் மற்றும் வேகம் - ஹூண்டாயின் முரட்டுத்தனமான இவி கார்

Published Jun 28, 2024 07:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 28, 2024 07:55 PM IST

  • ஹூண்டாய் நிறுவனத்தின் பேட்டரி கார் ஆக இருக்கும் ஹூண்டாய் இன்ஸ்டர் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன் கொண்டதாக உள்ளது.

உலக சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தனது மிக மலிவு விலை மின்சார கார் வாகனத்தை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் இன்ஸ்டர் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கார் விலைசுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் வரை இருக்கலாம் 

(1 / 9)

இன்ஸ்டர் கார்கள் ஏற்கனவே உலக சந்தையில் விற்பனையில் உள்ள காஸ்பரை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. முதலில் இந்திய சந்தையில் கேஸ்பர், தற்போது விற்பனையில் இருந்து வரும் டாப் இவி மாடல் கார்களான பஞ்ச்க்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் தற்போது எக்ஸ்டர் சந்தையில் இருந்து வருகிறது

(2 / 9)

இன்ஸ்டர் கார்கள் முதலில் கொரியாவிலும், அதைத் தொடர்ந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பசிபிக் ஆகிய இடங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார்களில் பெரும்பாலான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆரம்பத்திலேயே பொருத்தப்படும் எனவும், மேம்படுத்தப்பட்ட வசதி மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் விருப்பத்தின் பேரில் கிடைக்கும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது

(3 / 9)

இந்த கார் பற்றிய மேலும் விவரக்குறிப்புகள் வெளியீட்டுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும். ஹூண்டாய் நிறுவன இவி கார்களில் மிகவும் முரட்டுத்தனமான பதிப்பாக இன்ஸ்டர் கிராஸ் அழைக்கப்படும்  எனவும், விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

(4 / 9)

இந்த காரின் பரிமாணங்களைப் பொறுத்தவரை, ஹூண்டாய் இன்ஸ்டர் 3,825 மிமீ நீளம், 1,610 மிமீ அகலம் மற்றும் 1,575 மிமீ உயரம் கொண்டது. வீல்பேஸ் 2,580 மிமீ. பூட் ஸ்பேஸ் அளவு 280 லிட்டர் என உள்ளது

(5 / 9)

இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 42 kWh யுனிட் மற்றும் 49 kWh யுனிடில் உள்ளது. அவை 300 கிமீ மற்றும் 355 கிமீ, 266 வி மற்றும் 310 வி ஆர்க்கிடெக்சரில் இயங்கும் என்று கூறப்படுகிறது

(6 / 9)

நிலையான பேட்டரி மற்றும் நீண்ட தூர பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் மற்றும் 4 மணிநேரம் 35 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் மோட்டார்களின் சக்தி இரண்டு பேட்டரி பேக்குகளுக்கும் வேறுபட்டதாக உள்ளது

(7 / 9)

சிறிய பேட்டரி பேக்கின் எலெக்ட்ரிக் மோட்டார் 95 bhpயை உற்பத்தி செய்கிறது. அதிகபட்சம் 140 கிமீ வேகம் கொண்டதாக உள்ளது. பெரிய பேட்டரி பேக் அதிகபட்சமாக 113  bhp பவர் அவுட்புட் மற்றும் 150 கிமீ வேகம் கொண்டிருக்கும்

(8 / 9)

இந்த காரின் அம்சங்களைப் பொறுத்தவரை, ஹூண்டாய் இன்ஸ்டர் மேம்பட்ட டிரைவர் எய்ட்ஸ் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஆட்டோ ஹோல்ட், 360 டிகிரி கேமரா போன்ற பலவற்றைக் கொண்டுள்ளது

(9 / 9)

மற்ற கேலரிக்கள்