கவிழ்ந்து கிடக்கும் 18 டன் கேஸ்.. அகற்றப்பட்ட வள்ளுவர் சிலை.. திக் திக் கோயம்புத்தூர்!
- உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் லாரியில் இருந்து கேஸ் டேங்கர் கழன்று விழுந்து விபத்திற்குள்ளான நிலையில் இப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்தது என்ன?
- உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் லாரியில் இருந்து கேஸ் டேங்கர் கழன்று விழுந்து விபத்திற்குள்ளான நிலையில் இப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்தது என்ன?
(1 / 5)
அதிகாலை கேரளாவில் இருந்து கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி திரும்பும் பொழுது டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்திற்கு உள்ளானது. அதிலிருந்து கேஸ் வெளியேறி வரும் நிலையில் அதனை தடுக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.(PTI)
(2 / 5)
மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மேம்பாலத்தைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த செய்தி அறியாமல் வந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் வீடுகளுக்கு திரும்பினர்(PTI)
(3 / 5)
அதேசமயம் இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது இந்த பணிகள் நிறைவடைந்த பின்பே அனைத்து கடைகளும் திறக்கப்படும் என தெரிகிறது. இச்சம்பவம் காரணமாக மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
(4 / 5)
அதன்படி புரூக்பாண்டு சாலை, மரக்கடையில் இருந்து மேம்பாலம் இணையும் பகுதி, ரயில்வே நிலையம் பின்புறத்தில் இருந்து மேம்பாலம் இணையும் பகுதி, தண்டுமாரியம்மன் கோவிலில் இருந்து மேம்பாலம் இணையும் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது
(5 / 5)
இப்பகுதி முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த டேங்க் லாரி மீட்பு பணியின் போது மேம்பாலத்தில் இருக்கும் 4 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை, மீட்பு பணிக்கு இடையூறாக இருப்பதினால் அந்த சிலையை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தினால் மட்டுமே டேங்கர் லாரியை அப்புறப்படுத்த முடியும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மற்ற கேலரிக்கள்