improve your focus : உங்கள் கவனத்தை அதிகரிக்கும் 6 வழிகள்…
நீங்கள் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பது கடினமான ஒன்று. ஆனால் அதற்கு சில வழிகள் உண்டு, அதை பின்பற்றி உங்கள் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளலாம். உங்களை குறிக்கோளை அடையலாம். உங்களின் திறன்களை அதிகரிக்கலாம்.
(1 / 7)
நமக்கு அன்றாடம் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதென்பது பெரும் சவாலான ஒன்று. ஆனால், சில வழிகளை நாம் தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் நமது கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் நமது திறன்களை வளர்த்துக்கொள்வதுடன், நமது இலக்கையும் அடையலாம். அதற்கான வழிகள் என்னவென்று காணலாம். (Unsplash)
(2 / 7)
போமோடோரோ வழ - உங்கள் பணிகளை 25 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிட இடைவெளியில் செய்யுங்கள். அவ்வாறு 4 முறை வேலையை முடித்தவுடன், நீண்ட இடைவெளியை எடுத்துக்கொள்ளுங்கள். திட்டமிடுங்கள். உங்கள் இடைவெளி உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும். உங்கள் வேலையும் சுமையின்றி செய்து முடிக்கப்படும். (Unsplash)
(3 / 7)
ஒவ்வொரு வேலைக்கென்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுகுங்கள். இது உங்களுக்கு முக்கியமான வேலைகளை முதலில் செய்வதற்கு உதவும். மேலும் மற்ற வேலைகள் எப்படி இருக்கும் என்ற படத்தை மனதில் ஓட்டிக்காட்டும். இதனால், ஒரு வேலையை ஒரு நேரத்தில் உருப்படியாக செய்ய முடியும். (Unsplash)
(4 / 7)
இலக்குகளை நிர்ணயிப்பது உங்களுக்கு உங்கள் வெற்றி பயணத்தை விரைவாக்கவும், உற்சாகத்துடன் உழைக்கவும் உதவும். உங்கள் இலக்குகளை சிறிது சிறிதாக பிரித்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு கவனமுடன் ஒவ்வொன்றாக பகுத்தாய்ந்து நிறைவேற்ற உதவும். (Unsplash)
(5 / 7)
Eliminating Distractions: Distractions can come in many forms, including social media, email notifications, and even people. Identify what distracts you and create an environment that minimizes those distractions. Turn off notifications, work in a quiet area, and prioritize your workload.(Unsplash)
(6 / 7)
எப்போதும் நாம் ஈடுபட்டிருக்கும் வேலையில் முழுமையாக ஈடுபட வேண்டும். இதை நீண்ட சுவாசம் மற்றும் உங்கள் உணர்வுகளை கவனப்பதன் மூலம் செய்ய முடியும். இது உங்களுக்கு உங்கள் வேலையில் கவனம் செலுத்த உதவும். (Unsplash)
(7 / 7)
அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்வது உங்களை கவனத்துடன் வைத்துக்கொள்ள உதவும். இந்த இடைவேளைகளிலும் நீங்கள் நடப்பது, தியானம் செய்வது, பாடல்கள் கேட்பது என உங்களை ரீசார்ஜ் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். (Unsplash)
மற்ற கேலரிக்கள்