தூங்கவிடாமல் மிரட்டி ரசிகர்களை அதிரவிட்ட டாப் ஹாலிவுட் த்ரில்லர் படங்கள்! ரேட்டிங்குடன் லிஸ்ட் வெளியிட்ட ஐஎம்டிபி
- இந்திய சினிமாக்கள் இல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஹாலிவுட் த்ரில்லர் படங்களை ஏராளமாK இருக்கின்றன. அந்த வகையில் 2024இல் வெளியான டாப் த்ரில்லர் படங்களை ஐஎம்டிபி (IMDB) இணையத்தளம் வெளியிட்டுள்ளது
- இந்திய சினிமாக்கள் இல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஹாலிவுட் த்ரில்லர் படங்களை ஏராளமாK இருக்கின்றன. அந்த வகையில் 2024இல் வெளியான டாப் த்ரில்லர் படங்களை ஐஎம்டிபி (IMDB) இணையத்தளம் வெளியிட்டுள்ளது
(1 / 11)
2024 ஆம் ஆண்டின் டாப் 10 ஹாரர்-த்ரில்லர் படங்களை IMDB வரிசைபடுத்தியுள்ளது. இந்த படங்கள் பெற்றிருக்கும் ரேட்டிங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் லிஸ்டில் இருக்கும் த்ரில்லர் ஹாலிவுட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
(2 / 11)
லாங்க் லெக்ஸ்: ஒரு தொடர் கொலைகாரனைத் தேடி, ஒரு FBI முகவர் தொடர்ச்சியான மர்மமான தடயங்களைக் கண்டுபிடிக்கிறார். ஓஸ்குட் பெர்கின்ஸ் இயக்கியிருக்கும் இந்த படம் ஐஎம்டிபியில் 6.7 ரேட்டிங் பெற்றுள்ளது
(3 / 11)
ஸ்பீக் நோ இவில்: சஸ்பென்ஸ் நிறைந்த படமாக அமைந்திருக்கும் இதை ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கியுள்ளார். ஜேம்ஸ் மெக்காவோய், மெக்கென்சி, டேவிட் மெக்கெனரி ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஐஎம்டிபியில் 6.8 ரேட்டிங் பெற்றுள்ளது
(4 / 11)
தி சப்ஸ்டன்ஸ்: திகில் படமாக இருத்து இந்த படம் கடந்த மே மாதம் வெளியானது, இதைப் பார்த்த பார்வையாளர்கள் இரவில் தங்களது தூக்கத்தை இழந்ததாக தெரிவித்தனர். கோர்லி ஃபார்கேட் இயக்கிய இப்படத்தில் டெமி மூர், மார்கரெட் குவாலி மற்றும் டென்னிஸ் க்வாய்ட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஐஎம்டிபியில் 7.4 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது
(5 / 11)
ஸ்ட்ரேஞ்ச் டார்லிங்: ஜேடி மோல்னர் எழுதி இயக்கிய அமெரிக்க திரில்லர் படமாக இருக்கும் ஸ்ட்ரேஞ்ச் டார்லிங், ஒரு இரவில் சீரியல் கொலைகாரனின் கொடூரமான கொலையை களமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ஐஎம்டிபியில் 7.1 என ரேட்டிங் பெற்றுள்ளது
(6 / 11)
இன் ஏ வயலட் நேச்சர்: காட்டில் இடிந்து விழுந்த தீ கோபுரத்திலிருந்து ஒரு லாக்கெட் வெளியே எடுக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பிறழ்ந்த நிலையில் ஆவியாக இருக்கும் ஜானியின் அழுகிய சடலம் இருக்கிறது. அவரது உடல் உயிர்த்தெழுப்பப்பட்டு மரணத்தின் விளையாட்டு தொடங்குகிறது.கிறிஸ் நாஷ் இயக்கியிருக்கும் இந்த படம் ஐஎம்டிபியில் 5.6 ரேட்டிங் பெற்றுள்ளது
(7 / 11)
MaXXXine: 1980களில் லாஸ் ஏஞ்சல்ஸில் கடின உழைப்பாளியாக திகழும் மேக்சின் மின்க்ஸ் என்பவர் சந்தித்த போராட்டத்தைச் சுற்றி MaXXXine கதை சுழல்கிறது. இது ஐஎம்டிபியில் 6.3 ரேட்டிங் பெற்றுள்ளது
(8 / 11)
ஐ சாவ் தி டிவி க்ளோ: இயக்குநர் ஜேன் ஷான் பிரன் இயக்கியிருக்கும் இந்த த்ரில்லர் படம் ஐஎம்டிபியில் 5.8 ரேட்டிங் பெற்றுள்ளது
(9 / 11)
ஒடிட்டி: ஐரிஷ் மொழி திகில் திரைப்படமான ஒடிட்டி படத்தை டாமியன் மெக்கார்த்தி எழுதி, இயக்கியுள்ளார். இது ஐஎம்டிபியில் 6.7 என ரேட்டிங் பெற்றுள்ளது
(10 / 11)
இட்ஸ் வாட் இஸ் இன் சைட்: பழைய கல்லூரி நண்பர்கள் ஒரு பிரியாவிடை விருந்துக்கு கூடி, ஒரு போட்டியாளர் வரும்போது, பழைய போட்டிகளும் நொறுக்குதலும் மீண்டும் தலைதூக்கி ஆட்டம் போடுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறும் அந்த ஆட்டத்தால் நடக்கும் விளைவுகள் தான் கதை. இந்த படம் ஐஎம்டிபியில் 6.6 ரேட்டிங்கை பெற்றுள்ளது
மற்ற கேலரிக்கள்