2024 ஆம் ஆண்டின் சிறந்த இந்திய படங்கள்! முதல் இடத்தை பிடித்தது தமிழ் படம்! IMDB வெளியிட்ட பக்கா லிஸ்ட் இதோ!
- உலக அளவில் வெளியாகும் திரைப்படங்களை தரவரிசை படுத்தும் இணைய திரைப்பட தரவுத்தளம்(IMDB-Internet Movie Database) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய படங்களை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் தமிழ் படமே முதல் இடத்தை பிடித்துள்ளது.
- உலக அளவில் வெளியாகும் திரைப்படங்களை தரவரிசை படுத்தும் இணைய திரைப்பட தரவுத்தளம்(IMDB-Internet Movie Database) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய படங்களை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் தமிழ் படமே முதல் இடத்தை பிடித்துள்ளது.
(1 / 10)
இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகவும் சிறந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் மிகவும் உணர்வூப்பூர்வமான, உயிரோட்டமான கதைகள் நிறைந்த படங்கள் அதிகமாக வந்தன. இந்த நிலையில் IMDB வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தியப் படங்களில் பல தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளன. IMDB வெளியிட்டுள்ள பட்டியலை இங்கு காண்போம். (IMDB)
(2 / 10)
மகாராஜா இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான அதிரடித் திரைப்படமாகும். 2017இல் வெளியான குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார். தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, அருள்தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் IMDB பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.
(3 / 10)
இந்த ஆண்டு மலையாள மொழியில் பரபரப்பான திரைக்கதையோடு வெளியான படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இத்திரைப்படத்தில் சௌபின் சாகிர், சிறீநாத் பாசி, பாலு வர்கீசு, கணபதி எஸ். பொதுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரகுமான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்துள்ளார். இது தமிழ்நாட்டிலும் அதிக வசூல் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் IMDB பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
(4 / 10)
இயக்குனர் சி. பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் மெய்யழகன், இப்படம் பிரிந்து போன இரண்டு உறவுகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளையும், உரையாடல்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகும். இப்படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, திவ்யதர்ஷினி உட்பட பலர் நடித்து இருந்தனர். 2 டி எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்து இருந்தது. இப்படம் IMDB பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
(5 / 10)
இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நஸ்ரியா பகத்பாசில் மற்றும் அன்வர் ஆகியோரின் தயாரிப்பில், பகத் பாசிலின் மீராட்டலான நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான மலையாள திரைப்படம் ஆவேசம் கேங்கஸ்டர் கதையாக வந்த இப்படம் ஒரு சிறந்த மசாலா படமாகவும் நகைச்சுவை படமாகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இப்படம் ஐஎம்டிபி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது
(6 / 10)
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை, இவரது பள்ளிப்பருவத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதை இருந்தது. மிகவும் ஆழமான கதாபாத்திரங்கள், ஆழமான காட்சிகள் என ரசிகர்களின் மனதை உருக்கியது. இப்படத்தில் நிகிதா விமல், கலையரசன், திவ்யா துரை சாமி ஆகியோருடன், பொன்வேல், ராகுல் என இரண்டு சிறுவர்களும் இணைந்து நடித்து இருந்தனர். இப்படம் இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது.
(7 / 10)
கடந்த மார்ச் மாதம் இந்தியில் வெளியான லாபட்டா லேடீஸ் படம் இந்த பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. கிராமங்களில் புரையோடிக் கிடக்கும் சடங்குகளால் இரண்டு மணப்பெண்கள் மாறிவிடுகின்றனர். இறுதியில் இருவரும் சரியான இடத்திற்கு சேர்ந்தார்களா எனபதே கதை. வட மாநிலங்களின் யதார்த்தமான நிகழ்வுகளை கோரவைப்படுத்தி சிறந்த படைப்பாக இருந்தது. இப்படத்தினை கிரண் ராவ் இயக்கியுள்ளார். நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீ வஸ்தவா, பிரதிபா ரந்தா மற்றும் அபய் துபே ஆகியோர் நடித்து இருந்தனர்.
(8 / 10)
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் ஆட்டகத்தி தினேஷ், ஸ்வாஸிகா, ஹரீஷ் கல்யாண், பால சரவணன், ஜென்சன் திவாகர் உட்பட பலர் நடித்து செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. பட்டிதொட்டியெங்கும் வசூலில் அள்ளிக்குவித்த இப்படம் இந்த பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
(9 / 10)
பிரமயுகம் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திகில் திரைப்படமாகும். இயக்குநர் இராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருந்தார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் வை நொட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்தில் மம்மூட்டி, சித்தார்த் பரதன், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கேரளாவின் புனிதமான மர்மம், புராண மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கூறுகளைக் கொண்டுள்ளது. இப்படம் 8 ஆவது இடத்தில் உள்ளது.
(10 / 10)
திஞ்சித் அய்யாதன் இயக்கத்தில் மர்ம திரில்லர் கதை களத்தில் உருவான படம் 'கிஷ்கிந்தா காண்டம்'. இப்படத்தில் ஆசிப் அலி , விஜயராகவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 12-ந் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இந்த IMDB பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.
மற்ற கேலரிக்கள்