தொட்டது எல்லாம் துலங்கும்.. வெற்றி நிச்சயம்.. காலையில் எழுந்தவுடன் இந்த 6 விசயங்களை செய்ங்க!
- ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால் காலையில் எழுந்தவுடன் நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த வகையில் நாம் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 6 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால் காலையில் எழுந்தவுடன் நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த வகையில் நாம் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 6 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
(1 / 7)
இந்து மதத்தில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று பார்க்கப்படுகிறது. நீங்கள் காலையில் எழுந்ததும் கோயில் கோபுரத்தை தரிசிப்பதும், குறிப்பாக கோயில் கலசத்தை தரிசிப்பது மிகவும் விஷேசம். வெற்றியையும், மனநிறைவையும் தருவதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.(Pixabay)
(2 / 7)
வியாபாரம் செய்யக்கூடியவர்கள், புதிதாக சிந்திப்பவர்களுக்கு பெரும்பாலும் அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கும். புதிதாக ஏதேனும் தொடங்க நினைப்பவர்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது சிறந்தது. காலை சூரியனை பார்ப்பது நம் எண்ணங்களுக்கு நேர்மறையான அதிர்வுகளை கொடுக்கும்.(Pixabay)
(3 / 7)
நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது நம் வாழ்க்கையில் நமக்கு தன்னம்பிக்கையும், உற்சாகமும் தரக்கூடியது. இதனால் பெரிய வெற்றியும், உற்சாகமும் கிடைக்கும். உள்ளங்கை மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது.
(4 / 7)
காலையில் எழுந்ததும் சிரித்த முகத்துடன் கண்ணாடியைப் பார்ப்பது, அந்த நாள் முழுவதும் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.(Pixabay)
(5 / 7)
காலையில் விழித்ததும் வானத்தை பார்ப்பது சிறப்பாகும். மேகமூட்டங்களுடன் இருக்கும் வானம் மனதிற்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும். இது அன்றைய நாள் முழுவதும் பாசிட்டீவ் எனர்ஜியை தர உதவும்(Pixabay)
(6 / 7)
இந்து மத சாஸ்திரத்தில் பசுவை காமதேனுவுடன் ஒப்பிடுகிறார்கள். காலையில் பசுவையும் அதனுடன் சேர்த்து கன்றையும் பார்ப்பது, அனைத்து தேவர்களையும், மும்மூர்த்திகாளையும் ஒன்றாக பார்த்து தரிசிப்பதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. இது இன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.(Pixabay)
மற்ற கேலரிக்கள்