குழந்தைகளை நேர்வழிப்படுத்தவேண்டுமெனில், நீங்கள் அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேர்மறையான வழிகளைக் கடைபிடிக்கலாம்
குழந்தைகளை நேர்வழிப்படுத்தவேண்டுமெனில், நீங்கள் அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேர்மறையான வழிகளைக் கடைபிடிக்கலாம்
(1 / 11)
உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி? உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதுதான் கடுமையான டாஸ்குகளுள் ஒன்றாகும். அவர்களுக்கு அனுதாபத்தின் வழியே வழிகாட்ட வேண்டும். மரியாதை அவர்களுக்கு சுய கட்டுப்பாட்டைத் தரும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்தும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில டெக்னிக்குகள் உங்களுக்கு குழந்தைகளை ஒழுங்குபடுத்த உதவும். மேலும், பெற்றோர் – குழந்தைகள் உறவை வலுப்படுத்தவும் உதவும்.
(2 / 11)
ஒன்றாக இணைந்து பிரச்னைகளை சரிசெய்யுங்கள் - உங்கள் குழந்தைகளையும் உங்களுடன் சேர்ந்து பிரச்னைகளை தீர்ப்பதில் ஈடுபடுத்துங்கள். இது அவர்களிடம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு இது சூழலை சரியாக மதிப்பிட உதவும். இதனால் அவர்களின் உணர்வுகள் மதிப்பட்ட எண்ணமும் அவர்களுக்கு மரியாதை கொடுப்பட்டதைப் போன்ற உணர்வும் கிடைக்கும்.
(3 / 11)
அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுங்கள் - அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். அதன் வளர்சியைப் பாராட்டுங்கள். அந்த விஷயத்தில் நீ கடுமையான பணியை மேற்கொண்டாய் என அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நல்ல வேலை என்று கூறுவதற்கு பதில், இப்படி கூறினால், அது அவர்களுக்கு வளர்ச்சி மனநிலையைத் தரும். அவர்களை ஊக்கப்படுத்தும்.
(4 / 11)
வழக்கங்களை கொடுங்கள் - குழந்தைகளுக்கு வழக்கங்களை ஏற்படுத்துங்கள். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கவேண்டும். இரவு சரியான நேரத்தில் உறங்கச் செல்லவேண்டும். பாடம் படிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், திரை நேரம் என அனைத்துக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். குழந்தைகளுக்கு சில கவலைகள் உள்ளது. எப்போது, என்ன எதிர்பார்க்கிறார்கள் என தெரிந்தால், அவர்களுக்கு அது நல்லது. அவர்கள் அதை செய்து முடிக்கவேண்டும் என்ற கவலை இருக்கும்.
(5 / 11)
ரோல் மாடலாகுங்கள் - உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க சிறந்த வழி அவர்களுக்கு எடுத்துக்காட்டாவதுதான். அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேப்போல் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும். அதை அவர்கள் பின்பற்றுவார்கள். குழந்தைகளும் அதை புரிந்துகொண்டு நடப்பார்கள். அவர்களுக்கு நல்ல வழியும் கிடைக்கும். அவர்கள் நேர்மறையானவர்களாக இருப்பார்கள்.
(6 / 11)
கடிவாளத்தை தளர்த்துங்கள் - தெளிவான எல்லைகளை வகுப்பதன் மூலம் அவர்களின் கடிவாளங்களை தளர்த்துங்கள். நல்ல உரையாடலை நடத்துங்கள். அவர்களுக்கு தேர்வுகளைக் கொடுங்கள். அவர்களின் நல்ல பழக்கங்களுக்கு பரிசு கொடுங்கள். அனைத்து விஷயங்களின் விளைவுகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்.
(7 / 11)
தேர்வுகள் - சுதந்திரம் மற்றும் ஒத்துழைப்பு இரண்டையும் கொடுக்கும் தேர்வுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அது அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது. அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க இது தேவை. இது குழந்தைகளுக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.
(8 / 11)
விளைவுகள் - குழந்தைகள் என்ன தேர்ந்தெடுக்கிறார்களோ அதன் இயற்கையான விளைவுகளை அவர்கள் பார்க்கப்படும். அவர்கள் சில குறிப்பிட்ட டாஸ்குகளை செய்ய விரும்பவில்லையென்றால், அவர்கள் சில பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். இது அவர்களுக்கு பொறுப்பு மற்றும் அறம் ஆகியவற்றை அர்த்தமுள்ள வழிகளில் கற்பிக்கும்.
(9 / 11)
அவர்களை மடைமாற்றுங்கள் அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள் - அவர்கள் எதற்காவது கொந்தளித்தால், அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துங்கள். இது அவர்களை நேர்மறையாக ஒழுங்குபடுத்தும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கும்.
(10 / 11)
வயதுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகள் - குழந்தைகள் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும்போது அதைச் செய்ய முயல்கிறார்கள். எனவே விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் மட்டும் அவர்களின் மூளையை நிரப்புவதற்கு பதில், அவர்களிடம் குறிப்பிட்ட விஷயங்கள் மற்றும் தொடர்ச்சியான விஷயங்களில் கவனம்செலுத்துங்கள். அது குழந்தைகளுக்கு ஒரு வரைமுறையைக் கொடுக்கிறது. இது அவர்களுக்கு குழப்பத்தைக் குறைத்து, பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. அவர்கள் தவறாக நடக்காமல் இருக்க உதவுகிறது.
(11 / 11)
தொடர்ச்சியாக ஒரு செயலை செய்யக்கூடிய நபராகவும், அமைதியானவராகவும் இருங்கள் - குழந்தைகள் எப்போதும் உங்கள் எல்லைகளை சோதிப்பார்கள். அதற்கு நீங்கள் பதில் கொடுத்தால், அது உங்களை மோசமாக்கும். நீங்கள் அமைதியாக இருக்க விரும்பினால், அவர்களுக்கு அவர்களின் தவறுகளை உணர்வதற்கான வழியைக் காட்டுங்கள். அது அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க உதவும்.
மற்ற கேலரிக்கள்