Ice water facials: ஐஸ் தண்ணீர் பேஷியல்! சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஐஸ் வாட்டர் எனப்படும் குளிர் நீரை வைத்து பேஷியல் செய்யலாம் என்கிறார்கள் சரும நிபுணர்கள். உங்கள் முகத்தை ஐஸ் தண்ணீரில் நனைப்பதன் நன்மைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி பார்க்கலாம்.
(1 / 6)
சருமத்துக்கு ஐஸ் தண்ணீர் அல்லது கட்டிகள் தேய்த்து ஒத்தடம் கொடுப்பது ஒன்றும் புதிய நடைமுறை இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உறைய வைக்கும் வெப்பநிலையில் சருமத்தை தொடர்புபடுத்தி கொள்வதன் மூலம் ஏராளமான சரும ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்
(Photo by Twitter/summahhluvin)(2 / 6)
ஐஸ் தண்ணீர் பேஷியல் மூலம் சருமத்தில் ஏற்படும் துளைகள் இறுக்கமாகின்றன. ஐஸ் நீரின் குளிர்ச்சியான வெப்பநிலை உங்கள் தோல்களின் ரத்த நாளங்களை சுருங்க செய்கிறது. இது சருமத்தில் விரிவாக்கப்பட்ட துளைகளின் தோற்றத்தை சிறிது நேரத்தில் குறைக்கும். இதன் விளைவாக, உங்கள் தோல் சுத்திகரிக்கப்பட்டு மென்மையான அமைப்பை பெறும்
(Unsplash)(3 / 6)
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். முகத்தில் வழக்கத்தை விட அதிப்படியான ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளக்கும் நிறத்தை உருவாக்கும். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது. முகப்பரு போன்ற சரும நோய்களுக்கும் தீர்வு அளிக்கிறது
(4 / 6)
(5 / 6)
ஐஸ் தண்ணீர் ஒத்தடத்தை கொடுப்பதற்கு முன்பு, சிக்கலான தோல் அமைப்பு, சரும பிரச்னை இருப்பவர்கள் சரும பராமரிப்பு அல்லது தோல் நிபுணரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்
(Unsplash)மற்ற கேலரிக்கள்