தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bank Jobs: பேங்க் ஊழியராகணுமா?.. இதோ வெளியானது புதிய அறிவிப்பு.. தமிழ்நாட்டில் இத்தனை Post-ஆ? - முழு விபரம்!

Bank Jobs: பேங்க் ஊழியராகணுமா?.. இதோ வெளியானது புதிய அறிவிப்பு.. தமிழ்நாட்டில் இத்தனை post-ஆ? - முழு விபரம்!

Jul 02, 2024 01:10 PM IST Karthikeyan S
Jul 02, 2024 01:10 PM , IST

  • IBPS Clerk Recruitment 2024: பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம். 

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் (Clerk)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

(1 / 7)

எஸ்.பி.ஐ (SBI) வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை ஐபிபிஎஸ் (IBPS) எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. 

(2 / 7)

இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் நிரப்பி வருகிறது.

(3 / 7)

இந்த நிலையில் தான் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் (Clerk)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் 6,000த்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் 665 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

(4 / 7)

ஜூலை 1 முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

(5 / 7)

இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 02.07.1996-க்கு முன்பு பிறந்தவர்களும் 01.07.2004-க்கு பிறகு பிறந்தவர்களும் இதில் விண்ணப்பிக்க முடியாது. 20 - 28 வயது என்பது வயது வரம்பு. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. 

(6 / 7)

ஆர்வம் உள்ளவர்கள் ரூ. 850 செலுத்தி விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், ரூ 175 கட்டி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரி - https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv/

(7 / 7)

மற்ற கேலரிக்கள்