Thangar Bachan: ’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!
- ”Director Thangar Bachchan: பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ”
- ”Director Thangar Bachchan: பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ”
(1 / 8)
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ:-
(2 / 8)
பாமக சார்பில் திண்டுக்கலில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, ஆரணியில் முனைவர் அ.கணேஷ் குமார், கடலூரில் தங்கர் பச்சான், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா. தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
(3 / 8)
தேர்தலில் நிற்க வேண்டும் என்று நான் பாமகவை அனுகவில்லை; பாமக தரப்பில் இருந்து என்னிடம் ஒருவர் பேசினார். அதன் அடிப்படையில்தான் கடலூரில் போட்டியிடுகிறேன்.
(4 / 8)
கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்?
பதில்:- இது சவாலாக இருக்க வாய்ப்பில்லை; ஆளாளுக்கு தலைமை ஏற்க வேண்டும் என துடிக்கிறார்கள். இதை கடந்துதான் வர வேண்டும்.
(5 / 8)
தானே புயல் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் கடலூர், விழுப்புரம் மக்களுக்காக களப்பணி செய்துள்ளேன். அம்மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். இந்த மக்களுக்காக தேர்தலில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
(6 / 8)
நெய்வேலியை பாலைவனம் ஆக்கிவிட்டு கையில் திருவோடு கொடுத்துவிட்டு போகப்போகிறது. ஏற்கெனவே எடுத்த நிலங்கள் போக மறுபடியும் நிலங்களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் உள்ள பிரச்னைகளை நான் சென்று நாடாளுமன்றத்தில் பேசினால் புரிய வைக்க முடியும்.
மற்ற கேலரிக்கள்