Husband and Wife : ‘கோவை சரளா மனைவிகளிடம் வடிவேலுக்களாக அடங்கும் கணவர்கள்’ இந்த ராசிகளை சேர்ந்தவர்களாம்!
- Husband and Wife : திருமணம் நடைபெறும் முன் திருமணத்திற்காக காத்திருக்கும் நாம், திருமணத்திற்கு பின் அது ஏற்படுத்தும் கஷ்டங்கள் ஏராளம். அதை சமாளித்து வர நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டிவரும். மனைவிக்கு அடங்கிப்போகும் ஆண் ராசிகள் யார் என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.
- Husband and Wife : திருமணம் நடைபெறும் முன் திருமணத்திற்காக காத்திருக்கும் நாம், திருமணத்திற்கு பின் அது ஏற்படுத்தும் கஷ்டங்கள் ஏராளம். அதை சமாளித்து வர நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டிவரும். மனைவிக்கு அடங்கிப்போகும் ஆண் ராசிகள் யார் என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.
(1 / 9)
ஜோதிடத்தில் ஆண், ராசிகள் பெண் ராசிகள் என இரு வேறு ராசிகள் உண்டு. ஆண் குழந்தை பெண் ராசியிலும் பிறப்பார்கள். பெண் குழந்தை ஆண் ராசியில் பிறப்பார்கள். இதனால் எந்த பிரச்னையும் இல்லை. இந்த பெண் ராசியில் பிறந்த ஆண்கள், அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். அவர்கள் குடும்பத்திற்காக தனது மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்வார்கள்.
(2 / 9)
குடும்பத்தில் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் கணவன் அதை சமாளித்து வருவார்கள். பிரச்னைகளை சமாளித்துக்கொண்டு செல்வார்கள். இதற்கு பொண்டாட்டிக்கு பயந்தவன் என்ற அர்த்தம் கிடையாது. ஆனால் இவர்கள் மனைவிக்கு பக்குவமாக எடுத்துச்செல்லும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் விவாகரத்து என்பதே இருக்காது.
(3 / 9)
மனைவி சொல் கேட்டு குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசிகள். இந்த 6 ராசிகளைச் சேர்ந்த கணவன் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்த மனைவிகள். இந்த ராசிகளை சேர்ந்த மனைவிகள் குடும்ப சந்தோசத்திற்காக பிரச்னைகளை தீர்ப்பதில் முதன்மையாக இருப்பார்கள்.
(4 / 9)
ரிஷபம்
பொறுமைசாலி, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை பூமியுடன் ஒப்பிடும் அளவு நல்லவர்களாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் அந்த குடும்பத்தை இந்த ராசிக்காரர்கள் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வார்கள். அகழ்வாரை தாங்கும் நிலம்போல் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என்ற குறளுக்கு ஏற்ப மனைவி தன்னை அடித்தாலும், திட்டினாலும் இவர்கள் பொறுமை காத்து குடும்பத்தை நன்முறையில் வழிநடத்தி செல்வார்கள்.
(5 / 9)
கடகம்
நீர் ராசி என்று அழைக்கப்படுகிறது. நீரின் தன்மை குளிர்ச்சியானது, மென்மையானது. அதேபோல் இவர்கள் இருக்கும் இடம் அமைதியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றும்போது அந்த பாத்திரத்தில் எப்படி தண்ணீர் சென்று இருந்துகொள்கிறதோ அதோபோல் இவர்கள் ஒரு மனைவி எப்படி இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தி செல்வார்கள்.
(6 / 9)
கன்னி
மென்மையான குணமும், விட்டுக்கொடுக்கும் பண்பும் கொண்டவர்கள். குடும்பத்திற்கு ஏற்ற பல உதவிகளை இவர்கள் செய்வார்கள்.
(7 / 9)
விருச்சிகம்
எவ்ளோ அடிச்சாலும் தாங்கக்கூடிய வல்லமை கொண்டவர்கள். அதாவது குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் இவர்கள் அதை சமாளித்து, எதிர்நீச்சர் போட்டு முன்னேறிச் செல்லும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
(8 / 9)
மகரம்
ஒற்றுமையா இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மனைவி ஒருவேளை கோப்பப்பட்டாலும் அந்த நேரத்தில் அடங்கிப்போய்விட்டு, பின்னர் அவர்களை சமானதப்படுத்துவார்கள்.
(9 / 9)
மீனம்
கழுவுற மீனுல நழுவுற மீன் என்று இவர்களை கூறலாம். எதிரியை எதிர்த்து சண்டை போடுபவர்கள் ஒருவிதம் என்றால், எதிரியின் பலவீனத்தை அறிந்து அடிப்பவர்கள் மற்றொரு விதம். இவர்கள் எதிரியின் பலவீனத்தை அறிந்து அடித்து அமரவைக்கும் தன்மை கொண்டவர்கள். மனைவி கோபப்பட்டார்கள் என்றால், இவர்களும் எதிர்த்து அடிக்காமல் அந்த நேரத்தில் அமைதி காத்து பின்னர் மனைவிக்கு பிரச்னைகளின் வீரியத்தை எடுத்துக்கூறி அவர்களுக்கு புரியவைத்து, குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய வல்லமை பெற்றவர்கள். மனைவியின் கோபத்தை சிறப்பாக கையாளுவார்கள். குடும்பத்தில் இவர்கள் மனைவியை அனுசரித்து குடும்பத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.
மற்ற கேலரிக்கள்









