HT Cricket Special: 71 ஆண்டு கால கனவு!ஆஸ்திரேலியாவில் வரலாறு படைத்த இந்தியா - முதல் டெஸ்ட் தொடர் வெற்றி
- கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், சச்சின் டெல்டுல்கர், செளரவ் கங்குலி, எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவான் வீரர்களால் நிகழ்த்த முடியாத காரியத்தை செய்து சாதித்து காட்டினார் விராட் கோலி. 71 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் ஜனவரி 7ஆம் தேதியான இதேநாள் இந்தியா முதல் முறையாக டெஸ்ட தொடரை வென்றது.

(1 / 6)
1947 முதல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது இந்தியா. 2018ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டிலும், மெல்போர்னில் நடந்த மூன்றாவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்டிலும் வென்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது கோலி தலைமையிலான இந்திய அணி
(espncricinfo)(2 / 6)
இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியான பெர்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அதேபோல்் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக வென்றது
(espncricinfo)(3 / 6)
இந்த தொடரில் தனது சிறப்பான பேட்டிங்கால் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த புஜாரா 521 ரன்களை 1258 பந்துகளை எதிர்கொண்டு அடித்திருந்தார். 1868 நிமிடங்கள் பேட்டிங் செய்துள்ளார்
(espncricinfo)(4 / 6)
ஆஸ்திரேலியாவில் சதமடித்த விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன்களின் நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பண்ட். அத்துடன் அவர் 159 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்
(espncricinfo)(5 / 6)
பவுலிங்கில் மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெர்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற செய்தார்
(espncricinfo)மற்ற கேலரிக்கள்