தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  How To Protect Your Skin From Sun In Summer Season

Skin Skin Care Tips: கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்!

Apr 01, 2024 08:57 AM IST Karthikeyan S
Apr 01, 2024 08:57 AM , IST

  • கோடைக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க சில எளிய டிப்களை இங்கு காணலாம்.

கோடை வெயிலில் இருந்து முகம் மற்றும் சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கோடைக் காலத்தில், சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

(1 / 6)

கற்றாழை ஜெல்: புதிய கற்றாழை ஜெல்லை சூரிய ஒளி படும் இடங்களில் தடவவும். கற்றாழை ஜெல்லை வெப்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வீக்கம் மற்றும் கருநிறத்தை குறைக்க உதவுகிறது.

(2 / 6)

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் இயற்கையான சில சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஈரப்பதம், இலகுரக சூரிய பாதுகாப்புக்காக வெயிலில் செல்வதற்கு முன் உங்கள் தோலில் தேங்காய் எண்ணெயை தடவவும்.

(3 / 6)

சன்ஸ்கிரீன்: கோடைக் காலத்தில் தோல் பராமரிப்பில் சன்ஸ்கிரீன் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சிறந்தது ஆகும். இதன் மூலம் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க இது உதவும்.

(4 / 6)

தயிர்: தயிர் உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் தயிரை பயன்படுத்தலாம். தயிரை உங்கள் தோலில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்யும்.

(5 / 6)

வைட்டமின் சி உணவுகள்: டை காலத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்