Rose Water: சரும அழகை பாதுகாக்கும் ரோஸ் வாட்டரை இயற்கையான முறையில் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
- Rose Water: சரும பராமரிப்புக்கான முக்கிய பொருளாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
- Rose Water: சரும பராமரிப்புக்கான முக்கிய பொருளாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
(1 / 5)
சருமத்தை அழகாக்கவும், அதன் ஆரோக்கியத்தை பேனி காக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. ரோஸ் வாட்டர் சிறந்த டோனராகவும், தோலில் உள்ள துளைகளை இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது. கடைகளில் கிடைக்கும் கலப்படம் இல்லாத ரோஸ் வாட்டர் விலையானது அதிகம் என நினைப்பவர்கள், அதை வீட்டிலேயே தயார் செய்து சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம் (Freepik)
(2 / 5)
தரமான ரோஸ் வாட்டரை வீட்டில் வைத்தே சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். 500 கிராம் ப்ரஷ்ஷான ரோஜா பூக்களை எடுத்துக்கொண்டு அதன் இலைகள் ஒவ்வொன்றாக பிரிந்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்(Freepik)
(3 / 5)
பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, அதில் ரோஜா பூ இதழ்களை போட்டுவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். நீரின் நிறம் மாறும் வரை காத்திருக்க வேண்டும் (Freepik)
(4 / 5)
கொதிக்க வைத்த நீரின் நிறம் மாறி அரை லிட்டர் அளவாக குறைந்த பின்னர் அதை இறக்கி ஆற வைக்க வேண்டும். (Freepik)
(5 / 5)
இந்த நீர் ஆறிய பின்னர் நன்கு வடிகட்டி, ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்யவும். சந்தையில் கிடைக்கும் ரோஸ் வாட்டரை காட்டிலும் முற்றிலும் இயற்கையானதாக இருப்பதோடு எந்த பொருள்களும் சேர்க்கப்படாமல் தயார் செய்திருப்பதாக இருக்கும். இந்த ரோஸ் வாட்டர் முகத்தில் பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது. தண்ணீருக்கு பதிலாக, இந்த ரோஸ் வாட்டரை ஸ்க்ரப் மற்றும் ஃபேஸ் பேக்குகளில் கலக்கியும் பயன்படுத்தலாம்
மற்ற கேலரிக்கள்