Love Relationship: கணவன் - மனைவி இடையே உரசல்கள் இல்லாமல் காதலை அதிகரிக்கச் செய்வது எப்படி?
- Love Relationship: கணவன் - மனைவி இடையே உரசல்கள் இல்லாமல் காதலை அதிகரிக்கச் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
- Love Relationship: கணவன் - மனைவி இடையே உரசல்கள் இல்லாமல் காதலை அதிகரிக்கச் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
(1 / 8)
Relationship: கணவன் - மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிப்பது என்பது குறித்துப் பல்வேறு வல்லுநர்கள் கூறிய கருத்துகளின் தொகுப்பினைக் காணலாம்.
(2 / 8)
Relationship: கணவன் - மனைவி இருவரும் ஒருவர் பெற்றோரை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். கணவன் தனது குடும்பத்தினருடன் தனியாகப் போய் பேசும்போதும், மனைவி தனது குடும்பத்தினருடன் தனியாகப் போய் பேசும்போதும் தலையிடக் கூடாது.
(3 / 8)
மனிதர்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியவர்கள். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ முன்பு தவறாகப் பேசியிருப்பார். இப்போது மனம் திருந்தியிருப்பார். அப்படி இருக்கும்போது பழையதை குத்திக்காட்டி பேசக் கூடாது
(4 / 8)
எப்போதுதான் என்னை புரிந்துகொள்ளப்போகிறீர்களோ என எப்போதும் இல்லறத் துணையிடம் சீண்டாதீர்கள். அவனோ/ அவளோ அப்படித்தான் என்று யாரையும் காயப்படுத்தாமல் நடந்துகொள்ளுங்கள்
(5 / 8)
கணவன் - மனைவி இடையே நடக்கும் அனைத்து விஷயங்களையும், தம்பதிகள் தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லவே கூடாது. அது ப்ரேக் அப்புக்கு வழிவகுக்கும்.
(6 / 8)
எப்போதும் ஒருவரைப் பற்றி ஒருவர் பூதக்கண்ணாடி போட்டு, குறை சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக, ஒருவரை ஒருவர் பாராட்டக் கற்றுக் கொடுங்கள்.
(7 / 8)
ஒருவருக்கு இடையே ஒருவர் சண்டையிட்டுப் பேசாமல் இருந்தால் அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்குள் பேசி சமாதானம் ஆகிவிட வேண்டும். இல்லையென்றால், பிரச்னை விபரீதமாகிவிடும்.
மற்ற கேலரிக்கள்