முகத்தை பொலிவாக்கும் அதிகாலை பழக்கங்கள்! இதை மட்டும் பண்ணுங்க போதும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முகத்தை பொலிவாக்கும் அதிகாலை பழக்கங்கள்! இதை மட்டும் பண்ணுங்க போதும்!

முகத்தை பொலிவாக்கும் அதிகாலை பழக்கங்கள்! இதை மட்டும் பண்ணுங்க போதும்!

Nov 29, 2024 03:29 PM IST Suguna Devi P
Nov 29, 2024 03:29 PM , IST

  • காற்று மாசு, காலநிலை மாற்றம் என பல காரணிகளால் நமது முகம் பொலிவு இழந்து காணப்படுகின்றன. இதில் இருந்து விடுபட்டு உங்கள் முகத்தை பொலிவாக மாற்றும் சில பழக்கங்களை இங்கு காணலாம். 

முகத்தை பொலிவாக்க நாம் இரவு நேரங்களில் பல ஸ்கின்கேர் செயல்முறையை பின்பற்றுகிறோம். ஆனால் முகத்திற்கு காலை எழுந்ததும் சில சிகிச்சைகளை அளிக்க வேண்டும். அப்போதுதான் முகம் குறைகள் இல்லாமல் பொலிவானதாக மாறும். 

(1 / 6)

தினமும் காலை எழுந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து தேய்க்கவோ அல்லது ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரில் முகம் கழுவவோ வேண்டும். இது முகத்தின் நரம்புகளை அமைதியாக்கி முகத்தின் பொலிவை கூட்டுகின்றன. 

(2 / 6)

இரவு முழுவதும் முகத்தில் இறந்த செல்களின் வளர்ச்சி அதிகமாகி இருக்கலாம். எனவே காலை எழுந்ததும், முகத்தை எண்ணெய் கலந்த க்ளன்சர்களை உபயோகப்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள சிறு சிறு குழிகளில் தங்கியுள்ள மாசினை எளிமையாக அகற்றும். 

(3 / 6)

காலை எழுந்ததும் காபி, டீ போன்ற காஃபின் அதிகமாக இருக்கும் பானங்களை குடிப்பதைக் காட்டிலும் விட்டமின் உள்ள பிரஷ் ஜுஸ்களை குடிக்கலாம். இது முகத்திற்குத் தேவையான நீரேற்றத்தை தரும். 

(4 / 6)

காலை குளிப்பதற்கு சூடான தண்ணீரை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சூடான தண்ணீர் சருமம் மற்றும் நரம்பியல் செயல்பாட்டினை நேரடியாக பாதிக்கும். அதிகமாக தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்கள் வேகமாக சுருக்கத்தை அடையும் எனக் கூறப்படுகிறது.  

(5 / 6)

காலையில் குளித்து முடித்ததும் ஏதேனும் மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரின் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் முகத்தின் பொலிவு பராமரிக்கப்படும். இதனை தொடர்ந்து கடைபிடித்தால் முகத்தின் பொலிவு குறையப்போவதில்லை. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்