Hesitation: தயக்கத்தால் தோற்றவர்போல் இருக்கிறீர்களா?: தயக்கத்தை உடைப்பது எப்படி? டிப்ஸ்!
- திறமைகள் பல கொண்ட பலருக்கும் இருக்கும் முக்கியமான தடை, தயக்கம். இந்த தயக்கம் இருப்பதனால், ஒருவர் தன் திறமைகளை வெளிப்படுத்தமுடியாமல் சின்ன வட்டத்துக்குள் சுருங்கி விடுகின்றனர். தயக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான வழிமுறைகள் பற்றி அறிவோம்.

(1 / 7)
தயக்கத்தைச் சமாளிக்க முதல்படி அது எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்துகொண்டு செயல்படுவது தான். அது தோல்வியைப் பார்த்த பயமாகவோ, திறமைகள் மீதான சந்தேகமோ என அதனை ஆராய வேண்டும்.
(2 / 7)
நமக்கு தரப்படும் பணியை மலைபோல் எண்ணாமல், அதைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்து செய்தால் தயக்கம் வராது
(3 / 7)
தயக்கத்தினால் பெரும்பாலும் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சிறிய முடிவுகளை நம்பிக்கையுடன் எடுங்கள். அது உங்களது பெரிய முடிவு எடுக்கும் திறனை வளர்க்கும்
(4 / 7)
நாம் தயங்கும் ஒரு விஷயத்தில், அந்த துறையில் அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளுடன் உரையாடுவது நம் தயக்கத்தை தவிடுபொடியாக்கும்
(5 / 7)
தயக்கத்தை உடைத்து வெற்றியைப் பெற்றுவிட்டோம் என மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது தயக்கத்தை உடைக்க நல்ல வழியாகும்
(6 / 7)
தயங்கினால் நாம் இருக்கும் இடத்தில் அப்படியே தான் இருக்கவேண்டும். வளர்ச்சி இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்
மற்ற கேலரிக்கள்