Conserve Smartphone Battery Life: ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளை பாதுகாக்க இதை மட்டும் பாலே செய்யுங்க போதும்
இன்றைய ஸ்மார்ட் உலகத்தில் நமது அன்றாட பணிகள் பல ஸ்மார்ட்போனை நம்பியே உள்ளது. இந்த சூழ்நிலையில் அதை அடிக்கடி சார்ஜ் செய்வதென்பது எளிதான காரியம் கிடையாது. உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளையும், அதன் அளவு குறைவதை சேமிப்பதற்கான எளிய டிப்ஸையும் தெரிந்து கொள்ளலாம்
(1 / 5)
பிரகாசத்தை கட்டுக்குள் வைத்தல் - உங்கள் மொபைல் போன் ஸ்கிரீன் பிரகாசத்தை (Brightness) அட்ஜெஸ்ட் செய்து கொள்வதன் மூலம் பேட்டரி ஆயுள் பாதுகாக்கப்படும். 65 முதல் 70 சதவீதம் வரை பிரகாசம் வைத்துக்கொள்வது நலம் என்கிறார்கள் நிபுணர்கள். அதே சமயம் உங்களது கண் பார்வைக்கு உகந்த அளவிலும் அட்ஜெஸ்ட் செய்து கொள்வது நலம்
(Unsplash)(2 / 5)
வெப்பநிலையை நிர்வகித்தல் - அதிகபட்ச வெப்பநிலை உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி திறனை பாதிக்கலாம். எனவே உங்களது போனை சுற்றுப்புற வெப்பநிலை 16°C முதல் 22°C வரை (62°F முதல் 72°F வரை) வைத்துக்கொள்வதை உறுதிபடுத்தி கொள்ளவும். 35°C (95°F)க்கும் அதிகமான வெப்பநிலையில் உங்கள் மொபைலை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். ஏனென்றால் அது பேட்டரி திறனை நிரந்தரமாக சேதப்படுத்தும்
(Unsplash)(3 / 5)
உகந்த சேமிப்பக நிலைமையில் பேட்டரியை வைத்தல் - உங்கள் மொபைலை நீண்ட காலத்துக்கு சேமிக்க திட்டமிட்டால், அதை எப்போதும் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட அல்லது முழுமையாக சார்ஜ் இல்லாமல் இருப்பதை தவிர்க்கவும். இந்த இரண்டு நிலைகளும் பேட்டரி ஆரோக்கியத்தை பாதிக்கும்
(Unsplash)(4 / 5)
ஓய்பை பயன்பாட்டை அதிகரித்தல் - செல்போன் நெட்வொர்கை பயன்படுத்துவதற்கு பதில் ஓய்பை பயன்பாட்டை அதிகரித்தால் பேட்டரி ஆயுளை பாதுகாக்கலாம். அதேபோல் ஸ்கிரீன் பிரகாசத்தையும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். கண்ட்ரோல் சென்டரை பயன்படுத்தி திரையை மங்க செய்து, செட்டிங்சில் ஆட்டோ-பிரகாசத்தை (Auto-Brightness) இயக்க வேண்டும்
(Unsplash)(5 / 5)
சார்ஜிங் பாகங்களை மட்டும் பயன்படுத்துதல் - உங்கள் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்பட்ட சார்ஜிங் அடாப்டர் மற்றும் கேபிளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அது சேதமடைந்தால், உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றை வாங்கவும். ஏனெனில் மூன்றாம் தரப்பு சார்ஜர் உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை நிரந்தரமாக சேதப்படுத்தும்
(Unsplash)மற்ற கேலரிக்கள்