Business Astrology: சொந்த தொழிலில் கொடி கட்டி பறக்க ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்? அடேங்கப்பா இவ்வளோ இருக்கா!
- Business Astrology: குறைந்த பட்சம் ஒரு அதிபதியாவது பலம் பெற்று இருந்தால்தான் சுய தொழில் வெற்றி பெறும். இரண்டு அதிபதிகளும் பலம் இல்லாமல் இருந்தால் ஜாதகர் சம்பளத்திற்கு வேலை செய்வதே சிறப்பு ஆகும்.
- Business Astrology: குறைந்த பட்சம் ஒரு அதிபதியாவது பலம் பெற்று இருந்தால்தான் சுய தொழில் வெற்றி பெறும். இரண்டு அதிபதிகளும் பலம் இல்லாமல் இருந்தால் ஜாதகர் சம்பளத்திற்கு வேலை செய்வதே சிறப்பு ஆகும்.
(1 / 7)
வேலைக்கு செல்வதா அல்லது சுய தொழில் செய்வதா என்ற கேள்வி இன்றைக்கு பலரது மனதில் எழும் கேள்விகளாக உள்ளது. ‘திரை கடல் ஓடியும் திரவியம்’ தேடு என்ற சொல்லாடல் கடல் கடந்து சென்றாவது சம்பாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. சமுதாயத்தில் சுயமரியாதை உடன் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாக பணம் உள்ளது.
(2 / 7)
யாருடைய ஜாதகத்தில் 10ஆம் அதிபதி மற்றும் லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் சுய தொழில் செய்து வெற்றி பெற முடியும். இருவரும் பலம் பொருந்தியவர்காக இருக்கும் பட்சத்தில் நினைத்த தொழிலை ஜாதகர் செய்ய வாய்ப்பு உண்டு.
(3 / 7)
குறைந்த பட்சம் ஒரு அதிபதியாவது பலம் பெற்று இருந்தால்தான் சுய தொழில் வெற்றி பெறும். இரண்டு அதிபதிகளும் பலம் இல்லாமல் இருந்தால் ஜாதகர் சம்பளத்திற்கு வேலை செய்வதே சிறப்பு ஆகும்.
(4 / 7)
ஒருவர் சுய தொழில் தொடங்க வேண்டும் எனில் அவருக்கு அடுத்து வர உள்ள தசைகளையும் பார்க்க வேண்டியது அவசியம். ஒரு ஜாதகருக்கு 6ஆம் அதிபதி, 8ஆம் அதிபதி, விரையாதிபதி தசை நடக்கும் போது தொடங்கும் தொழில்கள் சிக்கல்களை சந்திக்கின்றது. மேலும் விரைய சனி காலத்தில் தொழில்களை தொடங்காமல் இருப்பது நன்மைகளை பெற்றுத் தரும், அதே வேளையில் 2ஆம் இடத்தில் சனி பகவான் வரும் போது தொழில் செழிக்கும்.
(5 / 7)
லக்னாதிபதி நீசம் பெற்றவர்கள், லக்னாதிபதி மறைவு ஸ்தானங்களான 6, 8, 12ஆம் இடங்களில் மறைந்து இருப்பவர்கள், 10ஆம் இடத்தில் குரு உள்ளவர்கள் மாத சம்பளம் கிடைக்கும் வேலைக்கு செல்வதே நலம்.
(6 / 7)
தசம கேந்திரம் எனப்படும் 10ஆம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பதை காட்டிலும், அசுப கிரகங்கள் எனப்படும் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரங்கள் உள்ளவர்கள் அதிக பணத்தை ஈட்டுபவர்களாக உள்ளனர்.
மற்ற கேலரிக்கள்