High Blood Pressure: இதயத்தை மட்டுமல்லாமல் முகத்தையும் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்! எப்படி தெரியுமா?-how does high blood pressure affects skin and know its side effects - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  High Blood Pressure: இதயத்தை மட்டுமல்லாமல் முகத்தையும் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்! எப்படி தெரியுமா?

High Blood Pressure: இதயத்தை மட்டுமல்லாமல் முகத்தையும் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்! எப்படி தெரியுமா?

Sep 20, 2024 08:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 20, 2024 08:00 AM , IST

  • High Blood Pressure Side Effects: உயர் ரத்த அழுத்தம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சருமத்தையும் பாதிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் 

உயர் ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு வழிவகுக்கிறது என்பது பலருக்கு தெரிந்து விஷயம்தான். ஆனால் உயர் ரத்த அழுத்தம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சருமத்தையும் பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்

(1 / 7)

உயர் ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு வழிவகுக்கிறது என்பது பலருக்கு தெரிந்து விஷயம்தான். ஆனால் உயர் ரத்த அழுத்தம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சருமத்தையும் பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்

உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்புடும். நீண்ட கால உயர் ரத்த அழுத்தம் ரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்

(2 / 7)

உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்புடும். நீண்ட கால உயர் ரத்த அழுத்தம் ரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்(shutterstock)

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைவுகளில் முக்கியமானதாக முகம் சிவத்தல் உள்ளது. சில நேரங்களில் முகம் சிவப்படைவதற்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம். உடற்பயிற்சி, வெப்பம், உணர்ச்சி, மன அழுத்தம், காரமான உணவு அல்லது மது அருந்துதல் போன்றவற்றால் முகம் சிவத்தல் ஏற்படும்

(3 / 7)

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைவுகளில் முக்கியமானதாக முகம் சிவத்தல் உள்ளது. சில நேரங்களில் முகம் சிவப்படைவதற்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம். உடற்பயிற்சி, வெப்பம், உணர்ச்சி, மன அழுத்தம், காரமான உணவு அல்லது மது அருந்துதல் போன்றவற்றால் முகம் சிவத்தல் ஏற்படும்(shutterstock)

நீடித்த உயர் ரத்த அழுத்தம் சருமத்தை மெலிதானதாகவும், பலவீனமானதாகவும் மாற்றும். இது காயம் அல்லது சேதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இத்தகைய தோல் காயங்கள் கூட குணமடைய நேரம் எடுக்கும்

(4 / 7)

நீடித்த உயர் ரத்த அழுத்தம் சருமத்தை மெலிதானதாகவும், பலவீனமானதாகவும் மாற்றும். இது காயம் அல்லது சேதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இத்தகைய தோல் காயங்கள் கூட குணமடைய நேரம் எடுக்கும்(shutterstock)

உயர் ரத்த அழுத்தம் முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுடன் நேரடியாக தொடர்புடையதாக கண்டறியப்படவில்லை. ஆனால் இது இந்த நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது

(5 / 7)

உயர் ரத்த அழுத்தம் முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுடன் நேரடியாக தொடர்புடையதாக கண்டறியப்படவில்லை. ஆனால் இது இந்த நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது(shutterstock)

உயர் ரத்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை வெகுவாக பாதிக்கிறது. சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, தோல் மந்தமாகவும், வறண்டதாகவும் தெரிகிறது

(6 / 7)

உயர் ரத்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை வெகுவாக பாதிக்கிறது. சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, தோல் மந்தமாகவும், வறண்டதாகவும் தெரிகிறது(shutterstock)

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உங்கள் ரத்த அழுதத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு, குறைந்த உப்பு மற்றும் மது அருந்துதல் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது ஆகியவை சரியாக பின்பற்ற வேண்டும்

(7 / 7)

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உங்கள் ரத்த அழுதத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு, குறைந்த உப்பு மற்றும் மது அருந்துதல் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது ஆகியவை சரியாக பின்பற்ற வேண்டும்(shutterstock)

மற்ற கேலரிக்கள்