Aadi Perukku: செல்வம் பெருக ஆடிப்பெருக்கின் போது செய்ய வேண்டியது என்ன?
- ஆடிப்பெருக்கு தினத்தன்று செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
- ஆடிப்பெருக்கு தினத்தன்று செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
(1 / 9)
ஆடிப்பெருக்கு அன்று குடும்பத்தோடு நீர் நிலைகளுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடுவது நல்லது. (Pixabay)
(2 / 9)
மேலும் மங்களப் பொருட்களை நீரில் விட்டு அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக கருதப்படுகிறது. (Gettyimages)
(3 / 9)
ஆடிப்பெருக்கு தினத்தன்று முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. (Gettyimages)
(4 / 9)
விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு வேப்பிலை மாலை சாற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபட வேண்டும். (Gettyimages)
(5 / 9)
ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் என்பது நம்பிக்கை. எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது. அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம். (Gettyimages)
(6 / 9)
ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் மூவர் அல்லது ஐவருக்கேனும் மங்கல பொருட்களை தானம் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. (Gettyimages)
(7 / 9)
தாம்பூலத்தோடு மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் கொடுத்தால் மாங்கல்ய பலம் நீடிப்பதோடு மட்டுமல்லாமல், குல விருத்தியும் உண்டாகும் என்பது ஐதீகம்.(Gettyimages)
(8 / 9)
ஆடிப்பெருக்கென்ரு மறக்காமல் அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வத்தல், எண்ணெய் ஆகியவற்றை வாங்கி வீட்டில் நிரப்பி வைக்க வேண்டும். (Gettyimages)
மற்ற கேலரிக்கள்