நாடெங்கும் பேசப்படும் கொரோனா பரவல்.. தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாடெங்கும் பேசப்படும் கொரோனா பரவல்.. தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

நாடெங்கும் பேசப்படும் கொரோனா பரவல்.. தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

Published Jun 03, 2025 12:51 PM IST Malavica Natarajan
Published Jun 03, 2025 12:51 PM IST

  • இந்தியாவில் தற்போது மொத்தம் 3961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் 2100 பேர் குணமடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் நிலை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

டெல்லியில் கொரோனா தொற்றால் 22 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அந்த இளம்பெண்ணுக்கு பல்மோனரி கோச் அல்லது போஸ்ட் டியூபர்குலோசிஸ் நுரையீரல் நோய் இருந்தது. இருதரப்பு கீழ் சுவாசக் கோளாறால் அவர் இறந்துள்ளார். தற்போது இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனாவால் மொத்தம் 3961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(1 / 6)

(Hindustan Times)

ஒரு நாளில் 203 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 2188 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட பாதி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

(2 / 6)

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்துள்ளது. புதிதாக 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 331 ஆக உள்ளது.

(3 / 6)

ஆனால், இதுவரை தமிழ்நாட்டில் யாரும் இறக்கவில்லை. மறுபுறம், டெல்லியில் புதிதாக 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் அதிகபட்சம் ஆகும்.

(4 / 6)

கொரோனா பாதிப்பு அடிப்படையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு மிகக் குறைவாக உள்ள மாநிலம் சண்டிகர். அங்கு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். மிசோரத்தில் 2 பேரும், தெலுங்கானா மற்றும் உத்தரகாண்டில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(5 / 6)

(Freepik)

கொரோனா வைரஸின் புதிய வகையின் பரவலைத் தடுக்க மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்குகின்றனர். முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு கை கழுவுதல் போன்ற பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. அதோடு, சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(6 / 6)

மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்