Baakiyalakshmi: மன்னிப்புக்கேட்ட பாக்யா.. பாரபட்சம் பார்க்காமல் பந்தாடிய ராதிகா- பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!
Baakiyalakshmi: ஒரு மகனாக நல்லது செய்யாமல் இருந்தாலும், கெட்டதையாவது செய்யாமல் இருந்திருக்கலாம். இதற்கு காரணம் நீயும், உன்னுடைய அம்மாவும் என்று சொல்ல, ராதிகா திணறுகிறாள். - பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல்
(1 / 5)
விஜய் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் ப்ளவர்வாஷ் தடுக்கி விழுந்ததால் ராதிகாவின் கர்ப்பம் கலைந்த நிலையில், ஈஸ்வரி தள்ளிவிட்டுதான் அவரின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்லி, ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே பார்க்கில் பாக்யாவை பார்த்த மயூ உண்மையைச் சொல்ல, ராதிகாவுக்கு தெரியாமல் மயூவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்தார் பாக்யா. இந்த நிலையில், ஈஸ்வரி நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்றைய தினம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை பார்க்கலாம்.
(2 / 5)
உண்மையை தெரிந்து கொண்ட கோபி, அம்மாவை பார்க்கச் செல்ல,
ஈஸ்வரி நீ என் மகனே கிடையாது என்று கூறி, தண்ணீரை தலையில் ஊற்றி தலைமுழுகினார். இதனை கோபி ராதிகாவிடம் சொல்லி, உங்களால்தான் நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன் என்று கூறி, ஆதங்கப்படுகிறான்.
இதைக்கேட்ட ராதிகா கோபத்தில் செய்திருப்பார்கள் என்று ஆறுதல் கூற, சடாரென்று இடைமறித்த கோபி அம்மாவுக்கு என் எவ்வளவு கோபம் இருந்தாலும் இதுநாள் வரை என்னை பார்த்து அப்படியான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதே கிடையாது என்று கூறி கொந்தளிக்கிறான்.
(3 / 5)
மேலும், ஒரு மகனாக நல்லது செய்யாமல் இருந்தாலும், கெட்டதையாவது செய்யாமல் இருந்திருக்கலாம். இதற்கு காரணம் நீயும், உன்னுடைய அம்மாவும் என்று சொல்ல, ராதிகா திணறுகிறாள்.
(4 / 5)
இதற்கிடையே வீட்டு வேலைக்காரி பாக்யா செய்திருப்பது மிகப்பெரிய விஷயம். ஈஸ்வரி கோபியை தலைமுழுகியதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்ல, அனைவரும் அதனை ஆமோதிக்கின்றனர். இதனையடுத்து வெளியே மயூ மற்றும் ராதிகாவை, பாக்யா சந்திக்க நேருகிறது.
(5 / 5)
அப்போது பாக்யா, மயூ செய்திருப்பது மிகப்பெரிய விஷயம். அவளை மிகச்சரியாக வளர்த்திக்கிறீர்கள் என்று சொன்னதுதான் மிச்சம்... என்னை கேட்கமால் எப்படி நீங்கள் மயூவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவீர்கள் என்று ராதிகா சாடினாள். மேலும், நீங்கள் செய்த காரியம் மிகவும் தவறு.. என்னுடைய பொறுமையை நீங்கள் மிகவும் சோதிக்கிறீர்கள்...
இது குறித்து ஏன் முன்னமே என்னிடம் வந்து பேசவில்லை என்று கேட்க, அதற்கு பாக்யா, மயூவை கோர்ட்டிற்கு கூட்டி வரமால், வேறு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தேன். ஆனால் அதற்கு நேரம் இல்லை என்று சொல்ல, ராதிகா உங்கள் மகள் இனியாவை நான் இப்படி அழைத்து சென்றால், நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா என்று கேட்க, பாக்யா மன்னிப்பு கேட்கிறாள். ஆனால், ராதிகா எப்போதும் நிலைமை ஒரே மாதிரியாக இருக்காது. மேல போனது கீழே வராமல் போகும் என்று சொல்லி சவால் விட்டுச்சொல்கிறாள்.
மற்ற கேலரிக்கள்