தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Horoscopes Are Very Lucky Due To The Change Of Planetary Positions In March

March: மார்ச் மாத கிரகநிலைமாற்றம்.. பெரும்அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள்!

Feb 27, 2024 05:44 AM IST Marimuthu M
Feb 27, 2024 05:44 AM , IST

  • விரைவில் மார்ச் மாதம் வரவிருக்கிறது. ஜோதிடப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் கிரகநிலை மாற்றத்தால், சில ராசியினருக்கு சில கிரக சேர்க்கைகள் நிகழ்கின்றன. இதனால் நல்ல மற்றும் கெட்ட யோகங்கள் உண்டாகின்றன.

மார்ச் மாதத்தில் ஏற்படும் கிரகநிலை மாற்றம், சில ராசிகளுக்குச் சிறப்பான காலநிலை மாற்றத்தை உண்டாக்கும். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதன், செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றம் செய்கின்றன. மேலும் சனி அஸ்தமனத்தில் இருந்து மீண்டும் உதயமாகிறது. எந்த ராசி அதிகமான  பலன்களைப்பெறும் என்பதைப் பொறுத்திருந்து காண்போம். 

(1 / 6)

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு மார்ச் மாதம் மிகவும் சந்தோஷத்தைத் தரக்கூடியது. இதனால் இக்காலத்தில் தொட்டது துலங்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். உங்களது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்க நினைத்தால் வருவாய் பெருகும். நிர்வாக ரீதியாகவும், நிதி நிலை ரீதியாகவும் நல்ல வளத்தைத் தரக்கூடிய மாதமாக மார்ச் மாதம் இருக்கும்.

(2 / 6)

கும்பம்: இந்த ராசியினருக்கு மார்ச் மாத, வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு இக்கால கட்டத்தில் லாபம் கிடைக்கும். சைடு பிசினஸ் செய்வதற்கும் ஏற்ற காலமாக இது பார்க்கப்படுகிறது. கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் முற்றிலும் அகலும். வருவாய் அதிகரிக்கும். 

(3 / 6)

கன்னி: இந்த ராசியினருக்கு மார்ச் மாதத்தில் நீங்கள் எவ்வளவோ முயற்சித்து முடிக்காத பணிகளை எளிமையாக முடிப்பீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். உங்களது இனிமையான பேச்சினால் வருவாய் அதிகரிக்கும். இல்லறத்துணை வழியில் இருந்து ஆதரவு பெருகும். புத்திரர்களால் வெற்றி வாய்ப்பினைப் பெறுவீர்கள். 

(4 / 6)

பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்